களத்தில் இறங்குகிறது ஜியோ ஹாட்ஸ்டார்.. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் அலறல்..!

By Bala Siva

Published:

 

ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் வாங்கி விட்டதாக கூறப்படும் நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் புதிய ஓடிடி களத்தில் இறங்கவுள்ளது. இதனால் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கப்பட்டதை அடுத்து, ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டும் இணைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. விரைவில், ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் புதிதாக இந்த ஓடிடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கவுள்ளது.

இதுவரை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், புதிய திரைப்படங்களை பெரும்பாலும் இத்தளங்களே வாங்கி வருகின்றன. ஆனால் தற்போது முகேஷ் அம்பானியின் ஜியோ ஹாட்ஸ்டார் களத்தில் இறங்கியிருப்பதால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் புதிய படங்கள் அனைத்தும் இதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் கட்டணங்களை விட குறைவான கட்டணத்துடன் ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாவில் ஏராளமான காணொளி உள்ளடக்கங்கள் உள்ளன, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் ஜியோ தனியாட்சி செலுத்தும் நிலையில், அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு கடும் சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.