வாரத்துல 10 மணி நேரம் தான் வேலை.. ஆனா மாசத்துக்கு 22 லட்சம் வரை சம்பளம்.. பெண்ணின் பிசினஸ் ஐடியா.. வியந்த நெட்டிசன்கள்

இன்று இந்த உலகத்தில் இருக்கும் அனைவருமே பணத்திற்கு பின்னால் தான் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். என்னதான் குடும்பம், உறவு என அனைத்தும் இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி நமது வாழ்நாளை மிகச் சிறப்பாக…

woman earns 22 laksh per month by part time

இன்று இந்த உலகத்தில் இருக்கும் அனைவருமே பணத்திற்கு பின்னால் தான் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். என்னதான் குடும்பம், உறவு என அனைத்தும் இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி நமது வாழ்நாளை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்றால் பணம் மிக இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் வருட கணக்கில் கடினமாக உழைத்தாலும் அதிர்ஷ்டமும், திறமையும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நமது சம்பாத்தியம் என்பது மிக குறைவாக இருக்கும்.

அப்படி ஒரு சூழலில் பெண் ஒருவர் வாரத்திற்கு 10 மணி நேரம் மட்டுமே பணிபுரிந்து ஒரு மாதத்திற்கு சுமார் 22 லட்ச ரூபாய் வரைக்கும் சம்பாதிப்பது தொடர்பான செய்தி அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா என்னும் பகுதியை சேர்ந்தவர் தான் எமிலி ஓடியோ சுட்டோன் (Emily Odio-Sutton). இவர் கடந்த பல ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், பகுதி நேரத்தில் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை டீ ஷர்ட் உள்ளிட்ட பொருட்களில் லோகோ டிசைன் செய்யும் பணியை இவர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக கேன்வா ப்ரோ உள்ளிட்ட ஒரு சில ஆப்கள் மூலம் புதிதாக டிசைன்களை உருவாக்கும் எமிலி, அதனை முன்னணி நிறுவனங்களின் லோகோவாக மாற்றி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது. வாரத்தில் இவர் சுமார் 10 மணி நேரம் மட்டும் தான் இதற்காக பணிபுரியும் நிலையில் மாசம் $26,200 டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் 22 லட்ச ரூபாய்) வரையும், வருடத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய் வரையிலும் இதன் மூலம் சம்பாதிப்பதாக தெரிகிறது.

இப்படி சொந்தமாக பிசினஸ் செய்வதுடன் மட்டுமில்லாமல் இதற்கான செலவும் அவருக்கு மிக குறைவாகவே இருப்பதால் அதன் மூலம் பயனும் மிகப் பெரிதாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தனது கடன் உள்ளிட்ட விஷயங்களை அடைத்ததுடன் வேறு சில விஷயங்களில் முதலீடு செய்து வருவதாக எமிலி தெரிவித்துள்ளார். குழந்தைகளின் கல்விச் செலவு, சுற்றுலா செலவு என பல விஷயங்களிலும் இந்த பணத்தை அவர் செலவு செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் புதிதாக டி-ஷர்ட், கிஃப்ட் பொருட்கள் உள்ளிட்டவற்றை டிசைன் செய்து விற்பனை செய்து வந்த எமிலிக்கு வருமானம் மிக குறைவாக தான் இருந்துள்ளது. ஆனால் மெல்ல மெல்ல இந்த பிசினஸில் இருந்த யுக்தியைக் கற்றுக் கொண்ட எமிலி, தற்போது அதிக ரூபாய் ஈட்டி வருவதுடன் மட்டுமில்லாமல் இதில் வாரத்திற்கு நேரம் ஒதுக்குவதுதான் முக்கியமான ஒரு சவால் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக பலரும் இங்கே முழுநேர வேலையில் ஈடுபட்டு இந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாமல் இருக்கும் நிலையில் பகுதி நேர வேலைகளை மிகச் சரியாக திட்டம் போட்டு பணம் சம்பாதித்து வரும் எமிலியை அனைவரும் வியந்து தான் பார்த்து வருகின்றனர். தான் பயன்படுத்தும் செயலிகளுக்கான பணம் தான் அவரது செலவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.