18 வருசமா பெண்ணுக்கு இருந்த வயிற்று வலி.. எக்ஸ் ரேவை எடுத்து பார்த்ததும் ஆடிப் போன மருத்துவர்கள்..

By Ajith V

Published:

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 18 ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அதற்கான காரணம் பலரையும் ஆடிப் போக வைத்துள்ளது. தெற்கு தாய்லாந்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்து அவரது வயிற்று பகுதியில் ஏதோ வலி எடுக்க தொடங்க கடந்த 18 ஆண்டுகளாக இதன் காரணமாக அந்த பெண் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக பல மருத்துவமனைகளை அந்த பெண் நாடி சிகிச்சை மேற்கொண்டு வந்தும் அதற்கான பலன் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றது. அந்த பெண்ணும் அவர் சந்தித்த மருத்துவர்களும் பலமுறை முயற்சி செய்தும் அந்த வயிற்று வலியிலிருந்து விடுபட முடியாமல் கடுமையாக சிக்கி வர அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு தான் இதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

வயிற்றில் இருந்த பொருள்

அப்படி அவரது வயிற்றுப் பகுதியில் வலி இருந்ததற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்ததும் அந்த பெண் மட்டும் இல்லாமல் மருத்துவமனையில் இருந்த அனைவருமே அதிர்ந்து போயுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனை ஒன்றில் தன் வயிற்றுப் பகுதியை எக்ஸ் ரே செய்து பார்த்தபோது ஒரு ஊசி ஒன்று அங்கேயே இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது எப்படி அந்த பெண்ணின் வயிற்றுக்குள் போனது என்ற தகவலும் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக பிரசவத்தின் பெயரில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை அந்த பெண்ணுக்கு மேற்கொண்ட சமயத்தில் அங்கே இருந்த செவிலியர் ஒருவர் தவறுதலாக ஊசியை உள்ளே வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒருவர் இதனை கை மூலம் எடுக்க முயற்சி செய்தும் அந்த ஊசி வெளியே வரவில்லை என தெரிகிறது.

18 வருடமாய் அவதி..

இதற்கிடையே ஊசி எடுக்க தாமதமானதால் பிரசவ நேரத்தில் அதிக ரத்தமும் போக பயத்தில் அந்த மருத்துவர் அப்படியே வைத்து தைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி வயிற்றில் ஊசி இருந்ததன் காரணமாகவே இந்தப் பெண் 18 ஆண்டுகள் வயிற்று வலியால் துடித்து வந்த சூழலில் தற்போது அதற்கான அறுவை சிகிச்சையும் விரைவில் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. இதற்காக பணச் செலவுகள் நிறைய ஆகும் என்பதால் சில தொண்டு நிறுவனங்களின் உதவியை வந்த பெண் நாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Needle in woman stomach for 18 years

மேலும் தவறுதலாக ஊசியை வைத்து தைத்தால் அந்த மருத்துவமனை மீதும் அப்போது பணி பணிபுரிந்தவர்கள் மீதும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் சரியாக தெரியவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஊசி இருப்பது தெரிந்தும் பண செலவு காரணமாக அந்த பெண்ணின் அறுவை சிகிச்சை தாமதமாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.