இனி ஆம்னி பஸ் பக்கமே போக மாட்டீங்க.. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு TNSTC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், பெங்களுரு, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி…

TNSTC Booking

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், பெங்களுரு, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர். பாதுகாப்பு, குறைவான கட்டணம் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆம்னி பேருந்துகளைக் காட்டிலும் அரசு விரைவுப் பேருந்தில் பயணிக்க நாளுக்கு நாள் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து விழாக் காலங்களில் சொந்த ஊர் திரும்புவதற்கு ஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளை காரணமாக அரசு விரைவு போக்குவரத்துப் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் வசதிக்காக புதிய ஏசி பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக இணையதளம் புதுப்பிக்கப்பட்டும், ஆம்னி பஸ்களைப் போல் தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விழா கொண்டாடத் தயாராகும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு..

இதனால் அரசு விரைவுப் பேருந்தில் டிக்கெட் புக் செய்வது எளிதான நடைமுறையாக மாறிவிட்டது. இந்நிலையில் பயணிகளை மேலும் கவரும் நோக்கில் தற்போது சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது அரசு போக்குவரத்துக்கழகம். அதன்படி வருகிற நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20-ம் தேதிவரை அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து 3 முத்தான பரிசுகளை வழங்க உள்ளது.

இதில் முதல் பரிசாக இரு சக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக ஸ்மார்ட் டிவியும், மூன்றாவது பரிசாக குளிர்சாதனப் பெட்டியும் வழங்க உள்ளது. ஏற்கனவே ரிட்டன் டிக்கெட்டுடன் சேர்த்து புக் செய்பவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், சபரிமலை சீசன் என வரிசையாக விழாக்காலங்கள் வருவதால் அரசுப் போக்குவரத்துக் கழகம் பயணிகளைக் கவர இந்தச் சலுகையை அறிவித்துள்ளது.