ஒரு நாள் கூட ஒண்ணா இருந்ததில்ல.. ஆனாலும் சிறைக் கைதி மீது 21 வருடமாக காதல்.. தடைகள் தாண்டி சாதித்த பெண்..

பொதுவாக இருவருக்கிடையே காதல் என்ற உணர்வு எப்படி வரும் என்பதே நிச்சயம் பெரிய மர்மமாக தான் இருக்கும். காதலுக்கு என எந்தவித பாகுபாடும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து புதிய உறவில் இறங்கும் போது…

woman love with prison inmate

பொதுவாக இருவருக்கிடையே காதல் என்ற உணர்வு எப்படி வரும் என்பதே நிச்சயம் பெரிய மர்மமா தான் இருக்கும். காதலுக்கு என எந்தவித பாகுபாடும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து புதிய உறவில் இறங்கும் போது அதில் கிடைக்கும் உணர்வுகளும் மிக உன்னதமானது. ஆனால், ஒன்றாக இருக்கும் போதே காதலில் நிறைய பிரச்சனைள் இருக்க, சிறையில் இருக்கும் ஒருவரை பல ஆண்டுகளாக பெண் ஒருவர் காதலித்து விரைவில் திருமணமும் செய்து கொள்ள இருக்கிறார்.

கனடாவின் டோரண்டோ பகுதியைச் சேர்ந்த பெண்மணி தான் ப்ரோன்வென் (Bronwen). இவருக்கு தற்போது 38 வயதாகும் நிலையில் 17 வயது முதல் ஒருவர் மீது காதல் உருவாகியுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பாக தனது தோழியின் காதலன் ஜெயிலில் இருந்த போது அவரை பார்க்க சென்ற சமயத்தில் அங்கே இருந்த ஜஸ்டின் என்ற கைதியை ப்ரோன்வென் சந்தித்துள்ளார். முதல் பார்வையிலேயே ப்ரோன்வெனிடம் தனது காதலை ஜஸ்டின் வெளிப்படுத்த, அவரோ அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
Canada Love Story

ஏதோ குற்றம் செய்துவிட்டு ஜெயிலில் இருக்கும் ஒருவரை எப்படி காதலிப்பது என ப்ரோன்வென் நினைத்து அதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரது தொலைபேசி எண்ணை பிடித்து ஜஸ்டின் சிறையில் இருந்து அழைத்துப் பேச இருவருக்கும் இடையில் சிறிய பழக்கமும் உருவாகியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல இருவரும் கடிதங்களை பரிமாறிக் கொண்ட நிலையில் ப்ரோன்வெனுக்கும் ஒரு கட்டத்தில் காதல் உருவாகியுள்ளது.

சிறைக்கைதி மீது காதல்

இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் ஜெயிலில் மட்டுமே சந்தித்து தங்களது காதலையும் வளர்த்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் எதிர்பாராத விதமாக இருவரும் பிரியும் முடிவையும் எடுத்துள்ளனர். சுமார் 12 வருடங்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் ஜஸ்டினை தேடிச் சென்றுள்ளார் ப்ரோன்வென். அவரை வேறொரு சிறைக்கு மாற்றியிருந்த நிலையில் கடும் முயற்சிக்கு பின்னர் அவரை கண்டுபிடித்து நேரிலும் சந்தித்து மீண்டும் தனது காதலை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பிறகும் மீண்டும் காதலை தொடங்கிய ப்ரோன்வென் மற்றும் ஜஸ்டின் ஜோடி சிறையில் வைத்து திருமணம் செய்யும் நோக்ககில் நிச்சயதார்த்தத்தையும் மேற்கொண்டுள்ளனர். விரைவில் சிறையில் வைத்து0 அவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ள நிலையில் இது தொடர்பான செய்தி தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஒரு நாள் கூட ஒண்ணா இருந்ததில்ல..

மேலும் சிறை கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு இவர்களின் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் தனது காதல் மிக உன்னதமான ஒன்று என்றும் ஆரோக்கியமான ஒரு உறவு என்றும் ப்ரோன்வென் நெகிழ்ந்து போய் கூறுகிறார். இத்தனை ஆண்டுகளில் ஒரு நாளை கூட இருவரும் ஒன்றாக இணைந்து செலவிடாத நிலையில் சிறைக்குள் இருந்த கைதி மீது மலர்ந்த காதல் தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.
Prison inmate love Story

மேலும் ஜஸ்டின் சிறையில் இருந்து வெளியே வருவதே கடினம் தான் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் என்றாவது ஒருநாள் அவர் வெளியே வந்து அவருடன் சிறந்த ஒரு வாழ்க்கையை வாழ்வோம் என்ற நம்பிக்கையிலும் ப்ரோன்வென் இருந்து வருவதாக கூறப்படுகிறது.