நமக்கே தெரியாமல் நம்முடைய போன் கண்காணிக்கப்படுகிறதா? நம்முடைய போனில் உள்ள மைக்ரோபோன், கேமரா உள்ளிட்டவைகள் பிறரால் ஆக்சஸ் செய்ய முடிகிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்ப்போம்.
ஸ்மார்ட்போனின் வலது புறம் மேலே பச்சை அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஒரு புள்ளி தோன்றினால், நம்முடைய போன் மற்றவர்களால் ஆக்சஸ் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பச்சை அல்லது ஆரஞ்சு லைட் எரிந்தால் உடனே சுதாரித்துக் கொள்ள வேண்டும். பச்சை லைட் எரிந்தால் நம்முடைய மைக்ரோபோன், கேமரா ஆகியவை மூன்றாவது நபரால் ஆக்சஸ் செய்யப்படுகிறது என்று அர்த்தம். அதே போல் ஆரஞ்சு லைட் இருக்கிறது என்றால் மூன்றாவது பார்ட்டி நம்முடைய மைக்ரோபோனை ஆக்சஸ் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று அர்த்தம்.
இதுமாதிரி பச்சை அல்லது ஆரஞ்சு லைட் எரிகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்தால், உங்களுடைய டேட்டாவை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு செட்டிங்ஸ் சென்று பர்மிஷன் மேனேஜர் என்ற பிரிவுக்கு சென்று, அதில் கேமரா என்ற ஆப்ஷன் சென்றால், உங்களுடைய கேமரா மற்றும் மைக்ரோபோன் எந்தெந்த செயலிகளுக்கு ஆக்சஸ் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில், நீங்கள் தேவையில்லாத செயலிகளுக்கு ஆக்சஸ் செய்ய அனுமதி வழங்கியிருந்தால் உடனே ஆக்சசை நிறுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உங்களுடைய டேட்டாவை காப்பாற்றிக் கொள்ளலாம்.