மீண்டும் Bigg Boss இற்கு கமல்ஹாசன் வேண்டும் என கூறும் ரசிகர்கள்… ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்…

Bigg Boss Tamil Season 8 35 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்கள் உள்ளே இருந்த நிலையில் கடந்த வாரம் ஆறு Wildcard போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். ஆனால் பழைய Housemates…

Bigg Boss

Bigg Boss Tamil Season 8 35 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்கள் உள்ளே இருந்த நிலையில் கடந்த வாரம் ஆறு Wildcard போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். ஆனால் பழைய Housemates கூட நன்றாக தான் விளையாடியது போல் தோன்றியது.

இந்த ஆறு பேர் உள்ளே எதற்காக வந்தார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடு அதிக படியான நபர்களைக் கொண்டிருந்ததால் கசகச என்று இருக்கிறது. இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது.

ஏனென்றால் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை விகுவதாக அறிவித்தார். அதற்கு அடுத்ததாக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகிறார் என்ற செய்தி வெளியானதும் அவர் எப்படி நிகழ்ச்சியை கொண்டு போவார் என்று மக்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

இதன்படி பிக் பாஸ் தொடங்கிய முதல் வார எபிசோடில் விஜய் சேதுபதி கலக்கியிருப்பார். நன்றாக பேசி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். ஆனால் அதற்கு அடுத்து நடந்த மூன்று வாரங்கள் எபிசோடில் விஜய் சேதுபதி பேசியது மக்களுக்கு சரியாக படவில்லை. போட்டியாளர்களிடம் பட்டு பட்டு என்று பேசுவது சரி இல்லை என்று இணையவாசிகள் பேசி வந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களாக விஜய் சேதுபதி மிகவும் சொதப்புகிறார் ஒரு தலைபட்சமாக பேசுகிறார் என்பது போல நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பிக் பாஸ் ரசிகர்கள் கமல்ஹாசன் மறுபடியும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

அவர்கள் கூறியது என்னவென்றால் கமல்ஹாசன் சார் போன தடவை உங்களுடைய அருமை தெரியாமல் நாங்கள் மிகவும் பேசி விட்டோம். இந்த தடவை நீங்கள் தான் தொகுத்து வழங்க வேண்டும். உங்களைத் தவிர இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வேறு யாராலும் சிறப்பாக கொண்டு செல்ல முடியாது என்று comebackkamalhaasan , wemissyoukamalhaasan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.