இந்த ஹிட் பாட்டெல்லாம் பாடியது இவரா? உங்களத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தோம்..

By John A

Published:

தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்கள் இன்று வரை பல ஹிட் பாடல்களைப் பாடி வருகின்றனர். டி.எம்.எஸ்., பி.பி ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி., கே.ஜே.யேசுதாஸ், என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் புகழ்பெற்ற பாடகர்கள் இன்றுவரை வரலாற்றில் தங்களது பங்கினைச் சிறப்பாகச் செய்துள்ளனர். இவற்றில் 1995-க்குப் பிறகு தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி ரசிகர்களை முணுமுணுக்க வைத்தவர்தான் பாலக்காடு ஸ்ரீராம்.

இதுவரை இவரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இந்தப் பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். உயிரே படத்தில் இடம்பெற்ற தைய்யா.. தைய்யா.., சாமி படத்தில் இடம்பெற்ற திருநெல்வேலி அல்வாடா.. மாயாவி படத்தில் தமிழ்நாட்டில் எல்லோருக்கும்.. மன்மதன் படத்தில் வானம்னா உயரம் காட்டும்.. சண்டைக்கோழி திரைப்படத்தில் முண்டாசு சூரியனே.. போன்ற பாடல்கள் இன்றைக்கும் ஸ்பீக்கர்களை அலற விடுபவை. ஹைபிட்சில் நரம்பு புடைக்க பாடும் இவரின் குரல் தனித்துவமானது.

நடிகர் சத்யராஜ் மனைவிக்கு என்ன ஆச்சு.. மகள் வெளியிட்ட உருக்கமான பதிவு..

கேரளமாநிலத்தில் பாலக்காடு அருகில் பிறந்த ஸ்ரீ ராமின் குடும்பம் பாரம்பரிய இசைக் குடும்பத்தைக் கொண்டதால் சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டு கர்நாடக சங்கீதம், புல்லாங்குழல் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தேர்ந்தார். மலையாளத்தில் சில படங்களுக்கு இசையமைத்த இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தது முதல் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுக்கத் தொடங்கினார். இவரது குரலில் என்றென்றும் சூப்பர் ஹிட் பாடலாக தன்னம்பிக்கை தரும் பாடலாக விளங்கும் படையப்பா படத்தில் இடம்பெற்ற வெற்றிக்கொடிகட்டு.. பாடல் எப்போதுமே இவரை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும்.

தொடர்ந்து தமிழ்சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாட ஆரம்பித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கோவில் படத்தில் இடம்பெற்ற அரளி விதையில் முளைச்ச பாடல், யுவன் இசையில் மன்மதன் பாடல், குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா.. என் சுவாசக் காற்றே படத்தில் இடம்பெறும் ஜில்லல்லவா..பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ராட்சச மாமனே பாடலில் கார்த்தியின் வரும் காட்சி போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார் பாலக்காடு ஸ்ரீ ராம்.

இவர் பாடிய பாடல்கள் எல்லாம் எப்போதுமே அனைவரும் விரும்பும் பிளே லிஸ்ட்டில் இருப்பதுதான் இவரது தனிச்சிறப்பு.