சமீபத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்தது என்பதும், குறைந்த ரீசார்ஜ் சலுகை வசதி கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறினார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் குறைந்து கொண்டே போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சில தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அந்த வகையில் பிஎஸ்என்எல் போட்டியை சமாளிக்க முடியாமல், தற்போது ஜியோ மீண்டும் 91 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின்படி 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 91 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மூன்று ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதும், இலவசமாக 50 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு வசதிகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் டேட்டாவை அதிகமாக பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் ஜியோ நிறுவனம் 91 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.