ஆடம் கில்க்றிஸ்ட், சங்கக்காரா வரிசையில்.. எந்த வீரருக்குமே கிடைக்காத பெயர்.. இரண்டே போட்டியில் சாதித்த சாம்சன்..

இந்திய அணியை பொருத்தவரையில் டெஸ்ட், ஒரு நாள் மட்டும் டி20 என மூன்று வடிவிலும் ரிஷப் பந்த்தின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவரைத் தாண்டி கே எல்…

sanju samson gilchrist and sangakkara

இந்திய அணியை பொருத்தவரையில் டெஸ்ட், ஒரு நாள் மட்டும் டி20 என மூன்று வடிவிலும் ரிஷப் பந்த்தின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவரைத் தாண்டி கே எல் ராகுல், துருவ் ஜூரேல், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பலரும் இந்திய அணியில் இடம் பிடிப்பதே கடினமாகத் தான் இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் டெஸ்ட், ஒரு நாள் போட்டியை தாண்டி டி20 போட்டிகளில் ரிஷப் பந்த்தை விட தான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் நிரூபித்துள்ளார் சஞ்சு சாம்சன்.

இந்தியாவில் இவருக்கான இடமே அரிதாக கிடைத்து வந்த நிலையில் தான் கடைசியில் கிடைத்த சில வாய்ப்புகளை மிக கச்சிதமாக பயன்படுத்தி வருங்காலத்தில் அணியில் தொடர்வேன் என்பதையும் சொல்லாமல் சொல்லி உள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் மோசமாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தது.

வங்கதேச தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மீண்டும் சஞ்சு சாம்சன் சொதப்ப, கடைசி போட்டியில் 40 பந்துகளில் சதமடித்து பல சாதனைகளை சொந்தமாக்கி இருந்தார். இந்த ஒரு இன்னிங்ஸில் அவரது ஆட்டத்தை வைத்து ரசிகர்கள் பலரும் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வர தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியிலும் மீண்டும் அதே சதத்தை அடித்து அரிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் சஞ்சு சாம்சன்.

மற்ற பல இந்திய பேட்ஸ்மேன் ரன் சேர்க்கவே தினறிய சூழலில் தான் ஒன் மேனாக போராடிய சஞ்சு சாம்சன், கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு விரட்டி 50 பந்துகளில் சதத்தை எட்டியிருந்தார். இதனால் இந்திய அணியும் 200 ரன்களைக் கடக்க, பல சாதனைகளும் தற்போது சஞ்சு சாம்சன் பெயருக்கு பின்னால் சேர்ந்துள்ளது. அத்துடன் மிக முக்கியமான ஒரு சாதனையையும் டி20 சர்வதேச வரலாற்றில் செய்து காட்டியுள்ளார் சஞ்சு சாம்சன்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்த விக்கெட் கீப்பராக ஆடம் கில்க்றிஸ்ட் உள்ளார். இவர் 17 சதங்களை அடித்துள்ள நிலையில் ஒருநாள் போட்டியை பொருத்தவரையில் குமார் சங்கக்கார 23 சதங்களை அடித்துள்ளார். அந்த வரிசையில் தான் தற்போது டி20 சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் (2) அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெயரை சஞ்சு சாம்சன் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.