நல்ல வாய்ப்புக்காக ஏங்கிய கவுண்டமணி… நிராகரித்த பாரதிராஜா… பாக்கியராஜ் செய்த வேலை!

80 மற்றும் 90 காலகட்டங்களில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் என்றால் கவுண்டமணி, செந்தில் தான். இவர்கள் நடித்த படங்கள் என்றாலே ஹிட் தான். காரணம் இவர்களது நகைச்சுவைக்காகவே படம் ஓடிவிடும். கதை கொஞ்சம் சரியில்லை…

bbg

80 மற்றும் 90 காலகட்டங்களில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் என்றால் கவுண்டமணி, செந்தில் தான். இவர்கள் நடித்த படங்கள் என்றாலே ஹிட் தான். காரணம் இவர்களது நகைச்சுவைக்காகவே படம் ஓடிவிடும். கதை கொஞ்சம் சரியில்லை என்றாலும் இவரது நகைச்சுவைத் தூக்கி விட்டுவிடும்.

அப்படிப்பட்ட படங்களில் இவர்களது காமெடியை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வந்தனர். அவர்கள் இருவரும் செய்யும் லீலைகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பார்கள். குறிப்பாகக் செந்தில் எடக்கு மடக்காகக் கேள்வி கேட்க கவுண்டமணி அவரை ‘நாற வாயா, பன்னி மூஞ்சி, பனங்கா மண்டையா’ அப்படி இப்படின்னு திட்டுறதும், உதைக்கிறதும் பார்க்க ரசிக்க வைக்கும். இவர்களை காமெடி இரட்டையர்கள் என்றே அழைப்பர். இவர்களில் கவுண்டமணி தமிழ்சினிமாவுக்குள் நுழைந்து அழுத்தமாக சாதித்தது எப்படி? அதற்கு யார் காரணம்னு பார்க்கலாமா…

16 vayathinile goundamani, Rajni
16 vayathinile goundamani, Rajni

சர்வர் சுந்தரம் படத்துக்குப் பிறகு ஒரு நல்ல படம் கிடைக்காதா என பல வருடம் ஏங்கினார் கவுண்டமணி. அவர் தனது ஊர் பக்கம் என்பதால் 16 வயதினிலே படத்தில் நடிக்க வைக்க பாரதிராஜாவை அணுகினாராம் பாக்கியராஜ். ‘ஆளும் மூஞ்சியும் சரியில்ல’ன்னு மறுத்துவிட்டாராம் பாரதிராஜா. ஆனால் பாக்கியராஜ் விடாப்பிடியாகக் கவுண்டமணியை நடிக்க வைக்க சம்மதம் வாங்கிவிட்டாராம்.

படம் வெளியான பிறகு கவுண்டமணி நடித்த காட்சிகள் பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அடுத்த படங்களில் யாரையும் ஆலோசிக்காமல் கவுண்டமணியைத் தேர்வு செய்தாராம் பாரதிராஜா.

16வயதினிலே படத்தில் ரஜினிகாந்துக்கு எடுபிடியாக வரும் கவுண்டமணி பண்ற நக்கலுக்கும், நய்யாண்டிக்கும் சிரிக்காதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக அவர் வசனம் பேசுவது நமக்கு சிரிப்பாக இருக்கும். ஆனால் அவர் கொஞ்சம் கூட சிரிக்க மாட்டார். அசால்டாகப் பேசுவார். இன்னொரு விஷயம் என்னன்னா கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணியன் கருப்பையா.

ஆனால் இவர் காமெடி பண்ணும்போது அதிகமாகக் கவுண்டர் கொடுத்துப் பேசி ரசிக்க வைப்பார். அதனாலேயே கவுண்டமணி என்று பெயர் வந்தது. ஆரம்பத்தில் நாடகங்களில் தான் நடித்தார். இவர் பேசுவது பாமரத்தமிழ். எல்லாருக்குமே எளிதில் புரியும். அது ரசிகர்களுக்குப் போய் ரொம்பவே ரீச்சானது. தவிர காமெடியாகவும் பேசுவார். குறிப்பாக யாராவது ஏதாவது பேசினால் அதற்கு எதிராகப் பேசி கவுண்டர் கொடுப்பார்.

அது ரசிக்க வைக்கும். அதனால் தான் சுப்பிரமணி, கவுண்டமணி ஆனார். குறிப்பாக கரகாட்டக்காரனில் வாழைப்பழ காமெடியை யாராலும் மறக்க முடியாது. சூரியனில் பூ மிதிக்கிற காட்சி, ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ன்னு சொல்ற நய்யாண்டி எல்லாம் அவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. சினிமாவில் நுழைவதற்கு முன்னரும் அதன்பிறகும் பல அவமானங்களைக் கடந்த கவுண்டமணி வீட்டு வாசலில் பல இயக்குனர்கள் வந்து வாய்ப்பு தர மாட்டாரா என்று காந்திருந்த காலமும் இருக்கத்தான் செய்கிறது.