அந்த செல்லத்தை இங்க தூக்கிட்டு வாங்கடா.. தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வாக்குறுதி கொடுத்த வேட்பாளர்..

By John A

Published:

பொதுவாகத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு இதைச் செய்கிறேன், மக்களுக்கு இதைச் செய்கிறேன் என்று பழைய புராணத்தையே பாடிக் கொண்டிருப்பார்கள். மக்களுக்கும் இதனைக் கேட்டு கேட்டு போரடித்து விட்டது. யாராவது ஏதாவது வித்தியாசமான திட்டங்கள் தீட்ட மாட்டாரா நமக்கு விடிவுகாலம் பிறக்குமா என்று எண்ணி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமான வாக்குறுதி ஒன்றைக் கொடுத்து சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியிருக்கிறார் ஒரு வேட்பாளர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகிற நவம்பர் 20 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நாட்டின் மிக முக்கியமான மாநிலம் என்பதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தேசியத் தலைவர்கள் மும்பையில் முகாமிட்டிருக்கின்றனர்.

அடேங்கப்பா இந்தப் பாடல்களில் இவ்ளோ விஷயம் இருக்கா…! தமிழ் சினிமாவின் சில வித்தியாசமான பாடல்கள்..

இந்நிலையில் அங்குள்ள பார்லி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) சார்பில் வேட்பாளராக ராஜா சாகேப் தேஷ்முக் என்பவர் களமிறங்குகிறார். வழக்கமாக எல்லா வேட்பாளர்களும் பிரச்சாரத்தின் போது அறிவிக்கும் அதே நடைமுறையைப் பின்பற்றாமல் புதியதாக ஒரு வாக்குறுதி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அதன்படி பார்லி தொகுதியில் திருமண வயதைக் கடந்து திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக வித்தியாசமான வாக்குறுதியை அளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள 90’s கிட்ஸ்களின் வாக்குகளை எளிதாகக் கவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த வாக்குறுதி தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.