18 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் நடந்த அதிசய நிகழ்வு… மெயிசிலிர்ந்த பக்தர்கள்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திருச்செந்தூர். திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் மிகச் சிறப்பான பண்டிகை கொண்டாட்டம் நிகழ்வு என்றால் அது கந்த சஷ்டி சூரசம்ஹாரம் தான். அசுரர்களின் தலைவனான சூரபத்மனை வதம்…

tiruchendur

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திருச்செந்தூர். திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் மிகச் சிறப்பான பண்டிகை கொண்டாட்டம் நிகழ்வு என்றால் அது கந்த சஷ்டி சூரசம்ஹாரம் தான். அசுரர்களின் தலைவனான சூரபத்மனை வதம் செய்யும் ஒரு நிகழ்வு திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுவதை சூரசம்ஹாரம் என்று கூறுவர்.

கந்த சஷ்டி மொத்தம் எட்டு நாட்களைக் கொண்டது. முதல் ஆறு நாட்கள் விரதம் இருந்து ஏழாம் நாள் சூரசம்ஹாரம் நடைபெற்று எட்டாவது நாள் முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தோடு இந்த கந்த சஷ்டி நிறைவு பெறும். அசுரர்களின் தலைவனான சூரபத்மனை வதம் செய்வதற்கு முருகப்பெருமான், திருச்செந்தூரில் படைவீடு அமைத்து அவனோடு ஆறு நாட்கள் போர் செய்து ஏழாவது நாள் அவனை வதம் செய்தார்.

முருகப்பெருமான் வெற்றியடைய வேண்டும் என்று அனைவரும் விம் இருந்ததால் தான் இந்த கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. குழந்தை வரம் வேண்டுவோர் திருமண வரம் வேண்டுவோர் தொழிலில் முன்னேற்றம் தீராத நோய் தீரவேண்டும் என அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்வர்.

இந்த வருடம் கந்த சஷ்டியில் திருச்செந்தூர் முருகன் சன்னதியில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வைரவேல் முருகப்பெருமானுக்கு சாற்றி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதை பக்தர்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரத்தோடு பூரிப்போடு இந்த அதிசய நிகழ்வை கண்டு ரசித்து செல்கின்றனர்.