இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் சிகிச்சை பெற பயனுறும் வகையில் தனிப்பட்ட பாலிசி இருக்கிறது என்பதை பலர் அறியாமல் இருக்கிறார்கள்.
ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், நீரிழிவு மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவை சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களுக்கு பயனுள்ள இன்சூரன்ஸ் காப்பீடு ஆகும். இந்த காப்பீட்டில் சர்க்கரை நோயால் சிறுநீரக செயலிழப்பு, அறுவை சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகியவும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்த காப்பீட்டை எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
மருத்துவமனையில் ஆகும் செலவு, மருத்துவர் கட்டணம், நோய் அறிதல் சோதனைகள், சிகிச்சைக்கான தொடர் செலவு ஆகியவற்றை ஈடுகட்ட இந்த பாலிசி நிச்சயம் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும்.
18 வயதிலிருந்து 65 வயது வரை இந்த பாலிசியை எடுக்கலாம் என்றும், ரூபாய் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை தேவையான கவரேஜ் ஏற்ப பாலிசி எடுத்துக் கொள்ளலாம். நிறுவனங்களை பொறுத்து, பாலிசி தொகை மாறுபடும். ஆன்லைனில் பாலிசி எடுத்தால், 5% தள்ளுபடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், இந்த பாலிசியை எடுத்து வைத்துக் கொண்டால் அவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.