மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு அதிகரிப்பால் திணறும் வங்கிகள்.. என்ன காரணம்?

  ஒரு காலத்தில் பொதுமக்கள் சேமிப்பு என்றால் வீடு வாங்குவது, நகைகள் வாங்குவது அல்லது வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்வது ஆகிய ஆப்ஷன்களை மட்டுமே வைத்திருந்தனர். ஆனால் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் உள்பட பல்வேறு…

bank

 

ஒரு காலத்தில் பொதுமக்கள் சேமிப்பு என்றால் வீடு வாங்குவது, நகைகள் வாங்குவது அல்லது வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்வது ஆகிய ஆப்ஷன்களை மட்டுமே வைத்திருந்தனர். ஆனால் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் உள்பட பல்வேறு முதலீட்டு அம்சங்கள் வந்துவிட்டதால் அதில் ஏராளமான முதலீடு செய்கின்றனர்.

குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது என்பதும், குறிப்பாக இளைஞர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு எந்த அளவுக்கு பிற்காலத்தில் நமக்கு நன்மை தரும் என்பதை புரிய வைக்கப்பட உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. எனவேதான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்பட டெபாசிட் செய்வது குறைந்து வருகிறது.

வங்கிக்கணக்கில் ஒரு சிறிய அளவு பணம் இருந்தால் கூட அதை எடுத்து குறைந்த காலம் மியூச்சுவல் திட்டத்தில் பொதுமக்கள் முதலீடு செய்து வருகின்றனர். அதேபோல், பிக்சட் டெபாசிட் என்பது தற்போது மிக குறைவாகிவிட்டது என்பதும், இன்னும் சில ஆண்டுகளில் பிக்சட் டெபாசிட் செய்யும் வழக்கமே பொதுமக்களிடம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

வங்கிகளை பொறுத்தவரை, என்னதான் அதிக அளவில் கடன் வழங்கினாலும், மக்களின் பணம் டெபாசிட்டாக உள்ளே வந்தால் மட்டுமே வங்கிகளை நடத்த முடியும். மக்களின் பணம் வருவது நின்று விட்டால் வங்கிகளின் நிலைமை சிக்கல் ஆகிவிடும். எனவேதான் வங்கிகள் தற்போது அவசர ஆலோசனை செய்து பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளை எப்படி வரவழைப்பது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நீங்கள் எத்தனை லட்சம் பிக்சட் டெபாசிட் செய்திருந்தாலும், அந்த வங்கி திவால் ஆகிவிட்டால் வெறும் ஐந்து லட்சம் மட்டுமே கிடைக்கும் என்ற விதி உள்ளது. இந்த விதியை மாற்றி, டெபாசிட்தாரர்களின் முழு பணமும் கிடைக்கும் வகையில் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டவேண்டும் என்றும் யோசனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, சீனியர் சிட்டிசனுக்கு முழு பாதுகாப்பு அளித்து, அதன் பிறகு அனைத்து மக்களுக்கும் அவர்களுடைய பிக்சட் டெபாசிட்டை பாதுகாப்பு ஏற்படுத்தும் வழியை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை போல பல்வேறு அம்சங்களை வங்கிகள் ஆராய்ந்து வருவதாகவும், மக்களின் பணம் உள்ளே வந்தால் மட்டுமே வங்கிகளை நடத்த முடியும் என்பதால், தங்க நகை சேமிப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.