டிரம்ப் – கமலா ஹாரிஸ்.. யார் வெற்றி பெற்றால் இந்திய பங்குச்சந்தை உயரும்?

By Bala Siva

Published:

 

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இந்த தேர்தலில் நேருக்கு நேர் மோத உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரில் ஒருவர் தான் அடுத்த அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்று நோக்கும் நிலையில், உலக பங்கு சந்தைகளும் இந்த தேர்தல் முடிவால் சில தாக்கங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தியா உள்பட பல  நாடுகளின் பங்குச் சந்தைகள் படுமோசமாக சரிவிற்கு முக்கிய காரணம், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர், ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் என்பது அனைவரும் அறிந்ததே.

போர் தீவிரம் அடைந்தால், பங்கு சந்தை சரிவதும், போர் கட்டுப்படுத்தப்பட்டால், பங்குச் சந்தை உயர்வதுமான நிலை இருக்கும். எனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர்  இந்த இரண்டு போர்களையும் முடிவுக்கு கொண்டு வருவார் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக, கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், போர் தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உள்ளது; ஆனால் டிரம்ப் வெற்றி பெற்றால், ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ஈரான்-இஸ்ரேல் போரை கட்டுப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதினுடன், டொனால்ட் டிரம்புக்கு நட்புறவு இருப்பதால், போரையும் முடிவுக்கு கொண்டு வர அவரால் முடியும் என்றும் கூறப்படுகிறது.

போர் முடிவுக்கு வந்தால், இந்திய பங்குச் சந்தை மிக வேகமாக உயரும் என்பதால், டொனால்ட் டிரம்ப் வந்தால் தான் இந்திய பங்கு சந்தைக்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஆனாலும், பதவிக்கு வந்த பின்னர் போர் நிறுத்த நடவடிக்கைகளை அவர் எடுப்பாரா? அப்படியே எடுத்தாலும், அது வெற்றி பெறுமா என்பதை எல்லாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.