கந்த சஷ்டி 5வது நாள்: வேல்வாங்கும் சிங்காரவேலர்… பகை விலகி ஓட இப்படி வழிபடுங்க..!

By Sankar Velu

Published:

கந்தசஷ்டியின் 5வது நாள் வந்தாலே நமக்குள் ஒரு வேகம் வந்துவிடும். முருகனுக்கே அந்த வேகம் வந்துவிடும். இன்னைக்குத் தான் அவர் சூரபத்மனைக் கொல்வதற்காகத் தாயாரிடம் போய் வேல் வாங்குவார்.

அதனால் முருகனே உற்சாகமாக சூரனை ‘போருக்கு நாளைக்கு வாடா நான் பார்த்துக்கறேன்’னு தயாராகிறது இந்த 5வது நாள் தான். எதுவா இருந்தாலும் நான் உங்கிட்ட விட்டுடறேன். எல்லாத்தையும் தாண்டி நல்லபடியா எனக்கு விரதத்தை முடிச்சிக் கொடுன்னு முருகப்பெருமானிடம் உரிமையாகக் கேட்க வேண்டிய நாள் இதுதான்.

தண்ணீர் மட்டும் குடிச்சிக்கிட்டே இருங்க. முருகப்பெருமான் வெற்றிகரமாக விரதத்தை முடித்து தருவார். ஆரோக்கியமாக இருக்கலாம். சரவணபவ என்ற மந்திரத்தில் ப என்ற எழுத்தில் விளக்கு வைக்க வேண்டும். 5வது நாள் சற்கோணதீபத்தில் 5 தீபம் ஏற்றிக்கொள்ளுங்கள். 6ஆகவும் ஏற்றலாம்.

காலை, மாலை தீபம் ஏற்றுங்க. தேன், தினைமாவு, பழங்கள் நைவேத்தியமாக வைக்கலாம். தினைமாவைப் புட்டு மாதிரி வைத்து அதில் தேன் கலந்து பிசைந்து நைவேத்தியமாகப் பண்ணலாம். பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணின்னு எதுவாக வேணுமானாலும் நைவேத்தியமாக வைக்கலாம். சொந்த வீடு கிடைக்க ஒரு பதிகம் உள்ளது.

அதுதான் சிறுவாபுரி திருப்புகழ். ‘அண்டர்பதி குடியேற’ என்று தொடங்கும் பாடல் தான் அது. அவ்வளவு தூரம் போக முடியாதவர்கள் வேல்மாறலையும் பாராயணம் பண்ணலாம். இந்த நாளில் வேல்வழிபாடு செய்வதும் சிறப்பு. வேல் வீட்டில் வைத்து இருந்தால் பண்ணுங்க. அல்லது முருகர் படத்தில் உள்ள வேலுக்கு சந்தன, குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

வேல் இருந்தால் தண்ணீர், பால், பஞ்சாமிர்தம் அபிஷேகம் பண்ணுங்க. அதன்பிறகு வேல்மாறல் பாராயணம் செய்யுங்க. இது நமது பகையில் இருந்து விடுதலை கிடைக்கும். அகப்பகை, புறப்பகை என இரண்டும் விலகும். நமக்கு நாமே தான் பகை. பகைவர்களிடம் இருந்து நம்மைக் காப்பவர் கந்தக்கடவுள். பகைவனையும் நமக்குப் பக்தனாக்குவார்.

sikkal
sikkal

அவரையும் பேசாம அடங்கி ஒடுங்கி நம் காலடியில் இருக்கச் செய்வார். எதிரியும் நம்மைக் கண்டு ஆச்சரியப்படும் வளர்ச்சியையும் ஆற்றலையும் நமக்கு முருகப்பெருமான் தான் தருவார். சிக்கல் சிங்காரவேலருக்கு வேல் வாங்கும் நேரம் மட்டும் அவருக்கு ஒரு வேகம் இருக்கும். அதனால் அன்று மட்டும் அவரது முகத்தில் வியர்த்து வழியும்.

அந்தக் காட்சியை இன்றும் நாம் பார்க்கலாம். இது ஒரு அழகான நிகழ்வு. ஆண்டுதோறும் நடக்கிறது. சிவபெருமான் அத்தனை சக்தியையும் திரட்டி வேலாக மாற்றி அதை சக்தியிடம் கொடுக்கிறார். அந்த வேலை வாங்கித் தன்னோட சக்தியை சேர்க்கிறார். அது சக்திவேல் ஆனது. முருகர் வாங்கியதும் வெற்றிவேல் ஆனது.

நமது இடர்களை எல்லாம் களைந்து வெற்றி, ஞானம், வீரம் தரும் வழிபாடு. இன்று (6.11.2024) பழங்களைத் தானம் பண்ணலாம். 6.11.2024 அன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் வழிபடலாம். தானம் செய்ய மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் தானம் செய்யலாம். இந்த நாளில் அருணகிரிநாதர் எழுதிய ‘அஞ்சுமுகம் தோன்றில்’ என்ற பதிகத்தைப் பாராயணம் செய்யலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.