இந்திய ஹெல்த்கேர், ஐடி, சேவை துறை டேட்டாக்களை குறி வைத்த சைபர் குற்றவாளிகள்.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

 

சைபர் குற்றவாளிகள் உலகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருந்தாலும், இந்தியாவில் அவர்களது டார்கெட் அதிகமாகி உள்ளதாகவும், குறிப்பாக ஹெல்த்கேர், ஐடி மற்றும் சேவைத் துறையில் சைபர் குற்றவாளிகள் அதிகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாசிட்டிவ் டெக்னாலஜி என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் சமீபத்தில் இது குறித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவில் தான் சைபர் தாக்குதல் அதிகம் இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள 80 சதவீத நிறுவனங்கள் சைபர் குற்றவாளிகளால் டார்கெட் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 36 சதவீதம் பொதுத்துறை நிறுவனங்கள் என்பதுதான் அதிர்ச்சியான தகவலாகும்,

குறிப்பாக ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறை ஆகிய நிறுவனங்கள் மீது தான் சைபர் குற்றவாளிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதால், சைபர் குற்றவாளிகளின் டார்கெட் இந்தியாவை மையப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு வெறும் 15 சதவீதம் மட்டுமே இருந்த சைபர் தாக்குதல்கள், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், தனிநபர்களின் ரகசிய விவரங்கள், நிறுவனங்களின் விவரங்கள், வர்த்தக ரகசியங்கள் ஆகியவை தான் சைபர் குற்றவாளிகளின் டார்கெட் எனவும், இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.