கூகுளின் 25% கோடிங்கை AI எழுதுகிறது. வீடியோ கிரியேட்டர்களுக்கு உதவும் ஜெமினி..!

By Bala Siva

Published:

 

கூகுளின் 25% கோடிங்கை AI டெக்னாலஜி தான் எழுதுகிறது என்றும் அதன் பிறகு மென்பொருள் பொறியாளர்களால் சரிபார்க்கப்படுகிறது என்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி பல துறைகளில் புகுந்து விட்ட நிலையில் AI இல்லாமல் இனி எதிர்காலம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோடிங் எழுதுவதற்கு இதுவரை சாப்ட்வேர் இன்ஜினியர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் AI மிகவும் எளிதாகவும் நுணுக்கமாகவும் கோடிங் எழுதி தருவதால் பலரும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் கோடிங்கை 25 சதவீதம் எழுதுவது AI என்ற தகவலை சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கூகுளின் ஜெமினி என்ற AI டெக்னாலஜி கூகுள் நிறுவனத்திற்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் உள்ள பல நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக வீடியோ கிரியேட்டிங் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெமினி மேம்படுத்தப்பட்டுள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

ஊகுளின் புதிய AI டெக்னாலஜி youtube மற்றும் வீடியோ கிரியேட்டர்களுக்கு உதவும் வகையில் வீடியோ டூல்ஸ்களை வெளியிட்டுள்ளதாகவும் இவை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. AI டெக்னாலஜியில் இன்னும் பல முதலீடுகள் கூகுள் நிறுவனத்தால் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது