வெளியாகிவிட்டது ChatGPT search.. கூகுளுக்கு மொத்தமாக வைக்கப்பட்ட ஆப்பு?

By Bala Siva

Published:

இணையம் என்றாலே “கூகுள்,” “கூகுள்” என்றாலே இணையம் என்ற அளவுக்கு, இதுவரை கோடிக்கணக்கான நபர்கள் பல்வேறு விஷயங்களை கூகுள் சர்ச் மூலம் தேடி வந்தனர் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது கூகுளுக்கு மாற்றாக ChatGPT search என்ற ஒரு புதிய வசதி வந்துள்ள நிலையில், இந்த வசதி கூகுளின் ஆட்டத்தை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக “ChatGPT” என்ற செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது அடுத்த கட்டமாக,ChatGPT search என்ற புதிய வசதி கொண்டு வர இருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கூகுள் சர்ச் போலவே, இதுவும் நாம் தேடுவதை பற்றிய முழு தகவல்களை தரும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று ChatGPT search ரிலீஸ் ஆகிவிட்டது.

கூகுள் சர்ச் மற்றும் ChatGPT search ஆகிய இரண்டின் முக்கிய வித்தியாசம் என்னவெனில், ChatGPT searchயில் நாம் ஒரு குறிப்பிட்ட வகையான தகவலை தேடினால் பல்வேறு செய்தி இணையதளங்களில் இருந்து பல தகவல்கள் கிடைக்கும். அந்த தகவல்கள் எந்தெந்த சோர்ஸ்களில் இருந்து எடுக்கப்பட்டதென்றும் நாம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம், குறிப்பிட்ட தகவலை எளிதாக புரிந்து கொண்டு தேடலாம். இந்தச் சேவையில், தட்பவெப்ப நிலை, பங்குச் சந்தை விவரங்கள், மேப் போன்றவை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

இது மட்டுமின்றி, மொபைல் சாதனங்களில் மட்டுமல்லாமல், பிரவுசர் முறையிலும், இதனை கம்ப்யூட்டரில் நிறுவி பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Googleக்கு மாற்றாக ChatGPT search இருக்குமா? கூகுளுக்கு பெரும் சவாலை எற்படுத்துமா? என்பதெல்லாம் போக போகத்தான் தெரியும்.