நிலத்தை தோண்டி நபர் எடுத்த குவளை.. உள்ளே புதையலை காத்தபடி இருந்த உயிரினம்?.. திகிலூட்டும் வீடியோ..

இங்கே நாம் நிகழ்காலத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது என்பது அனைவருக்குமே ஒரு புரியாத புதிர் தான். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள், அவர்கள்…

treasure with snake and frog video

இங்கே நாம் நிகழ்காலத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது என்பது அனைவருக்குமே ஒரு புரியாத புதிர் தான். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள், அவர்கள் என்ன உணவு சாப்பிட்டார்கள், அவர்களது வாழ்க்கை முறை எப்படி இருந்தது உள்ளிட்ட பல கேள்விகள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பதில் தெரிவித்து வரும் சூழலில் மக்களுக்கும் அது தொடர்பான விஷயங்கள் பெரிய அளவில் வியப்பை தான் ஏற்படுத்தி வருகிறது.

இந்த காலத்தில் நாம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமிக்கு அடியில் இருக்கும் பல பொக்கிஷங்கள் தொடர்பாகவும் பூமிக்கு அடியில் மறைந்து போன ஊர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் தொடர்பாகவும் நிறைய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இணையத்தை கலக்கி வரும் ஒரு வீடியோவில் ஆண் ஒருவர் பூமியைத் தோண்டி அதற்குள் இருந்து ஒரு பழங்கால குவளையை எடுக்க, அதற்குள் இருந்த விஷயம் தான் அனைவரையும் திகிலூட்டி உள்ளது.

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு நபர் மண்வெட்டி மூலம் நிலத்தை தோண்ட, அதற்குள் ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த புதையல் இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து மெல்ல மெல்ல அந்த இடத்தை அவர் தோண்டி எடுக்க, அதற்குள் ஒரு பழங்கால குவளையும் இருந்துள்ளது. பார்ப்பதற்கு தற்போது கிரிக்கெட்டில் உள்ள உலக கோப்பை போல இருந்த நிலையில் அழுக்கு, மூடி உள்ளிட்ட விஷயங்கள் அது பழமை வாய்ந்ததையும் உணர்த்துகிறது.

மேலும் அந்த நபர் மெல்ல மூடியை திறக்க அதற்குள் ஒரு பாம்பு இருப்பது அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அந்த பாம்புடன் ஒரு தவளையும் உள்ளே இருக்க, இரண்டையும் மெல்ல அந்த நபர் வெளியே எடுத்து போட்டதற்கு பின்னர் அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியமும் காத்திருந்தது. தங்க நிறத்திலான அணிகலன்கள் மற்றும் நிறைய நாணயங்கள் இருந்ததாகவும் தெரியும் நிலையில் இது தொடர்பான வீடியோ தான் தற்போது பலரையும் மெய்சிலிர்க்க வைத்து வருகிறது.

ஒரு பக்கம் இந்த வீடியோ பார்த்து மக்கள் மிரண்டு போன நிலையில் இன்னொரு புறம் அது எப்படி இத்தனை ஆண்டுகளாக பாம்பு உயிரோடு இருக்கும் என்றும் தவளையும் அப்படியே இருந்ததற்கான காரணம் என்ன என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோ, அந்த நபராகவே உருவாக்கி எடுக்கப்பட்டதாக தான் இருக்கும் என்றும் அதிலிருந்தும் பொருள்கள் கூட போலியானவை என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.