தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனது விடாமுயற்சி நம்பிக்கையால் மட்டுமே இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் சின்னத்திரை விஜய் டிவியில் மிமிக்ரி செய்பவராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது கேரியரை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன்.
அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் போன்ற படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் அதற்கு அடுத்து கமர்சியல் படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதாராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. தற்போது இந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தை பார்த்து விட்டு அனைவரும் கண்கலங்கி கொண்டே வெளியே வருகின்றனர். ராணுவ வீரர்கள் நமக்காக நம் நாட்டிற்காக என்னவெல்லாம் தியாகம் செய்கிறார்கள் என்பதை தெளிவாக எடுத்து கூறுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு என்ன கூறினார்கள் என்பதை பகிர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் கூறியது என்னவென்றால் டெல்லியில் ஆர்மி ஆபீஸர்ஸ்காக நாங்க பிரைவேட்டாக அமரன் படத்தை ஸ்கிரீனிங் பண்னோம். அப்போ அந்த படத்தை பார்த்து எல்லாரும் சந்தோஷமா ஆயிட்டாங்க. அந்த ஆர்மி ஆபீஸர்ல ரெண்டு பேரு என்கிட்ட வந்து நாங்க உங்களுக்கு ஆபர் பண்றோம் நீங்க வந்து ஆர்மில ஜாயின் பண்ணுங்க அப்படின்னு கேட்டாங்க என்று ஓபன் ஆக பகிர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.