Bigg Boss Tamil Season 8 Day 25 வில் தீபாவளி கொண்டாட்டம் காலையிலே தொடங்கிவிட்டது. பிக் பாஸ் அனைவரும் குளிப்பதற்காக எண்ணெய் மஞ்சள் தண்ணீர் போன்றவற்றை அனுப்பி வைத்திருந்தார். ஒருவருக்கொருவர் எண்ணெய் தேய்த்துக்கொண்டு தீபாவளிக்காக தயாராக ஆரம்பித்தனர். பெண்கள் அனைவரும் அழகாக கோலம் இட்டு வீட்டை டெக்கரேஷன் செய்து கொண்டிருந்தார்கள்.
பின்னர் பிக் பாஸ் மதிய உணவும் இரவு உணவும் சமைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். அதன்படி அனைவரும் தீபாவளியை ஒன்றாக கொண்டாடி மதிய உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர். அசைவ விருந்தினை பிக் பாஸ் அனுப்பி இருந்தார். அடுத்ததாக யாரும் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் என்ட்ரியாக கவின் வீட்டிற்குள் வந்தார்.
தீபாவளியை கொண்டாடவும் Bloody Begger திரைப்படத்தின் பிரமோஷனுக்காகவும் பிக் பாஸிற்கு வந்தார் கவின். வரும்போது ஒரு Gift கொண்டு வந்திருந்தார். அனைவரிடமும் படத்தை பற்றி கலந்துரையாடி பிக் பாஸில் தான் போட்டியாளராக இருந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு அனைவரும் கார்டன் ஏரியாவில் நிலா சோரும் சாப்பிட்டார்கள்.
ஹவுஸ் மேட்ஸ்சோடு நன்றாக டைம் ஸ்பென்ட் பண்ணிவிட்டு பட்டாசு வெடித்து விட்டு போகும் போது இந்த கிப்ட்டில் அனைவர் வீட்டில் இருந்தும் லெட்டர் வந்திருக்கிறது என்று கூறிவிட்டு சென்றார். அதன்படி ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தீபாவளிக்காக லெட்டர் வந்திருந்தது. அனைவரும் அதை படித்து பார்த்து எமோஷனலாக அழ ஆரம்பித்து விட்டனர்.
பின்னர் இந்த வீட்டில் யார் உங்களுக்கு மனதிற்கு நெருக்கமானவர் அவர்களுக்கு உங்களால் முடிந்த கிப்ட் பரிமாறிக் கொள்ளுங்கள் என்ற பிக்பாஸ் கூறினார். அதன்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவருக்கு தங்களால் முடிந்த கிப்ட் பரிமாறி கொண்டனர். தீபாவளி கொண்டாட்டம் பிக் பாஸ் வீட்டில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. பிக் பாஸ் இனி என்ன டாஸ்க்கு கொடுப்பார் மற்றும் எலிமினேஷன் டாஸ் நடக்கவிருக்கிறது அதை யார் ஜெயிப்பார்கள் என்பதை காத்திருந்து பார்ப்போம்.