2 மணி நேரத்தில் உருவான கிருஷ்ணகானம்.. இரு தலைமுறைகளைத் தாண்டிய கவியரசரின் பக்தி வரிகள்..

By John A

Published:

நீங்கள் 40, 50 வயதைத் தாண்டியவர்களாயின் இந்தப் பாடல்களைக் கேட்காமல் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. மார்கழி மாதத்திலும், கிருஷ்ணன் கோவில்களிலும் எப்போதும் இந்த மந்திர கானம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அதுதான் கிருஷ்ணகானம். கவியரசர் கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், பி.சுசீலா, டி.எம்.எஸ், எஸ்.பி.பி, எல்.ஆர். ஈஸ்வரி, வீரமணி, எஸ்.ஜானகி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாடிய சூப்பர் ஹிட் ஆல்பம். இந்தப் பாடல்கள் எப்படி உருவானது தெரியுமா?

இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஏவிஎம் நிறுவனம் திரைப்படங்கள் மட்டுமின்றி அடுத்ததாக பக்திப் பாடல்களையும் வெளியிடலாம் என்று எண்ணி ஏ.வி.எம். குமரன், கிருஷ்ணன் பக்திப் பாடல்களை வெளியிட விருப்பம் கொண்டார். தனது விருப்பத்தை கண்ணதாசனிடம் கூற நான் தயாராக இருக்கிறேன். எம்.எஸ்.வி. தயாரா என்று கேட்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். எம்.எஸ்.வி-யிடமும் கேட்க அவரும் கவிஞர் தயார் என்றால் நானும் தயார் என்று கூறியிருக்கிறார். மறுநாள் கண்ணதாசனுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் அனைவரும் கூடினர்.

பாக்யராஜின் படத்துக்கு வந்த எதிர்ப்பு.. விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கி வெற்றிபெற்ற சூப்பர்ஹிட் படம்

எம்.எஸ்.வி-யிடம் டியூன் கேட்டிருக்கிறார் கண்ணதாசன். ஆனால் எம்.எஸ்.வி-யோ முதலில் வரிகளைக் கொடுங்கள் அதற்குத் டியூன் போடுகிறேன் என்று கூற, கண்ணதாசன் அவ்வளவுதானே.. என்று உடனே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
அந்த புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்..

என்று வரிகளைக் கொடுக்க கண்ணதாசன் உடனே டியூன் போட்டிருக்கிறார். அடுத்த இரண்டு மணிநேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. ஆம் இன்று நாம் கேட்டு மகிழும் கிருஷ்ண கானம் முழுக்க தயார் ஆனது. அதன்பின் பி.சுசீலா உள்ளிட்ட பாடகர்களைக் கொண்டு எம்.எஸ்.வி. ரெக்கார்டிங் செய்தார். இப்படித்தான் இந்த அழியாப் புகழ் கொண்ட கிருஷ்ணகானம் பாடல்கள் உருவானது. இந்தப் பாடல்களிலேயே கிருஷ்ண பகவானின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் குறிப்பிட்டிருப்பார் கவிஞர். மேலும் இப்பாடல்களைக் கேட்டாலே மனதில் அமைதியும், சாந்தமும், தெய்வீகமும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.