பாக்யராஜின் படத்துக்கு வந்த எதிர்ப்பு.. விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கி வெற்றிபெற்ற சூப்பர்ஹிட் படம்

By John A

Published:

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள் ஆகிய படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின் அவர் இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ். இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் அதனைத் தொடர்ந்து தானே பல படங்களை இயக்கி நடித்தார். சுவரில்லாத சித்திரங்கள், கன்னிப் பருவத்திலே ஆகிய படங்களில் நடித்த பின் பாக்யராஜ் தயாரித்து இயக்கிய படம் தான் ஒரு கை ஓசை. 1980-ல் வெளியான இப்படம் பில சோதனைகளைச் சந்தித்த பின்னரே திரைக்கு வந்தது.

முதலாவதாக படத்தின் தலைப்பு. ஒரு கை ஓசை என்றால் எப்படி? ஒரு கையில் எப்படி ஓசை வரும் எனவே தலைப்பினை மாற்றுங்கள் என்று விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பாக்யராஜ் சுவர் இல்லா சித்திரங்கள் படத்தினி தலைப்பைக் காட்டி சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நான் சுவர் இல்லா சித்திரங்கள் என்று வைத்தேன். படம் வெற்றி பெற்றது அதுபோல்தான் இதுவும் என பதிலளித்தார்.

இதற்கு அடுத்ததாக பாக்யராஜின் முக்கியமான பலமே அவரின் மேனரிஸமும், வசனங்களும் தான். ஆனால் படத்தின் கதைப்படி அவர் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி. எனவே படம் ஓடாது என மீண்டும் எதிர்ப்பு. இதற்கும் பதிலடி கொடுத்தார் பாக்யராஜ். பேச முடியாதவனுக்கு வாழ்க்கையில் மற்ற மகிழ்ச்சியான விஷயங்களே கிடையாதா எனக் கூறி வாயடைக்க வைத்தார்.

COOL STAR கூல் சுரேஷ்.. வெளிவந்த மஞ்சள் வீரன் போஸ்டர்.. நம்ம கூல் சுரேஷா இது..?

இது போதாதென்று மூன்றாவதாக வந்த குழப்பம் நடிகை அஸ்வினி. இயல்பாகவே அஸ்வினியின் முகம் ஒரு சோகத்துடன், சாந்த சொரூபியாக இருப்பார். ஒரு கை ஓசை படத்திற்கு முன்னர்தான் உதிரிப் பூக்கள் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் இந்தப் படத்திலும் அவர் முதிர்ச்சியாகத் தெரிகிறார் என்ற விவாதம் கிளம்பியது. ஆனால் இதில் பாக்யராஜ் வாயைத் திறக்கவில்லை. அஸ்வினியை வேறொரு கோணத்தில் காட்டவிரும்பியவருக்கு இதில் சறுக்கல் ஏற்பட்டது.

இருப்பினும் படம் வெளியானது. படம் எப்போதும் போல் சூப்பர் ஹிட் ஆனது. படத்தில் பாக்யராஜ் வாய்பேச முடியாத இளைஞனாக நடித்துப் புகழ் பெற்றார். மேலும் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கும் இந்தப் படம் தான் முதல் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கை ஓசை ஓங்கி ஒலித்தது.