தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் மூலமாக சென்னை, மதுரை, விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், விரைவுப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட கோட்டங்கள் வாயிலாக தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் லட்சக்கணக்கில் மக்கள் பயணித்து வருகின்றனர். மேலும் விழாக்காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருப்பினும் போக்குவரத்துத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் ஒப்பந்த அடிப்படையில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க போக்குவரத்துத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற 1279 ஊழியர்களுக்கு நிலுவை பணப்பலன் அனைத்தும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மற்றுமொரு மகிழ்ச்சிகரமான செய்தியாக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அஜீத் ரேஸிங் யூனிட்டில் இடம்பெற்ற அந்த முத்திரை.. முதல் ஆளாக வாழ்த்துச் சொன்ன துணை முதல்வர் ஸ்டாலின்
இதன்படி மொத்தம் 2877 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கோட்டம் வாரியாக காலிப்பணியிடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளுக்கு 2340 காலிப்பணியிடங்களும், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான 537 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. மேற்கண்ட பணியிடங்களில் 769 காலி இடங்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மீதமுள்ள 2108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போக்குவரத்துக்கழகங்கள் கடும் நிதிச்சுமையச் சந்தித்து வரும் வேளையிலும் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளும் அவ்வப்போது வாங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த அறிவிப்பால் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தனியார் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.