பேஜர் வெடிப்பு சம்பவம் எதிரொலி: மோட்டோரோலா போனை தடை செய்த ஈரான்..!

By Bala Siva

Published:

 

கடந்த சில வாரங்களுக்கு முன்னால் ஈரான் நாட்டில் பேஜர்கள் வெடித்து பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், இந்த பேஜர்கள் மோட்டோரோலா நிறுவனத்தால் செய்யப்பட்டது என்பதால், மோட்டோரோலா நிறுவனத்தின் மொபைல் போன் உள்பட அனைத்து பொருட்களுக்கும் தடை விதித்து ஈரான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒட்டுமொத்த பேஜர்களும் வெடித்ததை அடுத்து இதுகுறித்து ஆலோசனை செய்தது. மோட்டோரோலா நிறுவனம் தான் பேஜர்களை வழங்கியது என்பதால், பாதுகாப்பற்ற பேஜர்களை வழங்கியதாக குற்றம் சாட்டிய ஈரான் அரசு, மோட்டோரோலா நிறுவனத்தின் மொபைல் போன் உள்பட அனைத்தையும் ஈரான் நாட்டில் தடை செய்தது.

இந்நிறுவனத்தின் எந்த பொருள்களையும் ஈரான் நாட்டில் உள்ள கடையில் விற்பனை செய்வது கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் சட்டவிரோதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அனைத்து கடைகளிலும் மோட்டோரோலா மொபைல் போன் தங்கள் கடையில் கையிருப்பு இல்லை என்று அறிவித்துள்ளன. ஆன்லைன் தளங்களில் கூட மோட்டோரோலா நிறுவனத்தின் எந்த பொருட்களும் கையிருப்பு இல்லை என்று தான் காட்டிக் கொண்டிருக்கின்றன. ’

ஈரான் அரசாங்கத்தின் இந்த உத்தரவு மோட்டோரோலா  நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என ஈரான் நாட்டின் மொபைல் தொலைபேசி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags: iran, motorola, pagers