ஆப்பிள் நிறுவனம் தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்பதால் இந்தோனேசியா நாட்டின் அரசு அந்த நிறுவனத்தின் ஐபோனுக்கு தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தோனேசியா நாட்டில் 1.71 டிரில்லியன் டிரில்லியன் ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதாக கூறிய நிலையில், 1.48 டிரில்லியன் மட்டுமே முதலீடு செய்துள்ளது. எனவே, வாக்குறுதி கொடுத்த தொகையை ஆப்பிள் நிறுவனம் தங்கள் நாட்டில் முதலீடு செய்யவில்லை என்பதால் இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன் விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்தோனேசியா நாடு முழுவதும் ஆப்பிள் ஐபோன் 16 மாடல் ஐபோனை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும், வெளிநாட்டில் இருந்தும் இந்த மாடலை மக்கள் வாங்கிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு வரக்கூடாது என்றும் இந்தோனேசியாவின் தொழில் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஆப்பிள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தோனேசியா சென்று அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லை. ஆப்பிள் ஐபோன் தடை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
இந்தோனேசியா நாட்டில் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் சில ஸ்மார்ட்போன்களில் குறைந்தது 40 சதவீத பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது என்பதும், இதுவும் ஆப்பிள் ஐபோன் 16 தடைக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை ஆப்பிள் நிறுவனம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.