நெட்பிளிக்ஸ் முதல் நோக்கியா வரை, இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். மேலும், இன்னும் சில வேலை இழப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக AI டெக்னாலஜி எம குறிப்பிடப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பின், வேலை நீக்க நடவடிக்கை படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது, AI டெக்னாலஜி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காரணமாக பல ஊழியர்கள் வேலை இழந்து வருவதாகவும், 2024 ஆம் ஆண்டு மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் வேலை இழந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புள்ளி விவரத்தின்படி, உலகம் முழுவதும் 470 நிறுவனங்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் 15 துறைகளில் வேலை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பெர்ஸ்கி தனது லண்டன் அலுவலகத்தை முற்றிலுமாக மூடியுள்ளதாகவும், அதில் பணியாற்றிய அனைவரும் வேலை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.நோக்கியா நிறுவனமும் செலவை குறைப்பதற்காக 350 தொழிலாளர்களை வேலை நீக்கியுள்ளது; அதேபோன்று சீனாவில் உள்ள நிறுவனங்கள் சுமார் 2000 பேரை வேலை நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் நிறுவனம் ஏற்கனவே 14 ஆயிரம் மேனேஜர் நிலை பணியாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது, இதனால் சுமார் மூன்று பில்லியன் செலவு மிச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கணினி நிறுவனமான இன்டெல் நிறுவனமும் நூற்றுக்கணக்கான பேரை வேலை நீக்கப்போவதாகவும், போன்பே நிறுவனமும் தனது 60% கஸ்டமர் சப்போர்ட் ஊழியர்களை வேலை நீக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த வேலை நீக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக AI டெக்னாலஜி முன்னேற்றம் மற்றும் செலவு குறைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளன.