அண்மையில் சென்னையில் அமரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சாய்பல்லவி தான் கதைகளை எப்படி தேர்ந்தெடுக்கும் விதம்குறித்துப் பேசினார். தமிழ் சினிமாவில் கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதன்பின் மலையாளம் பிரேமம் படம் மூலம் தென்னிந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக உருவெடுத்தவர் சாய் பல்லவி. எத்தனையோ நடிகைகள் கிளாமருடன் நடிக்கும் வேளையில் மிக எதார்த்தமாக, கவர்ச்சி ஏதுமின்றி நடிப்பால் தன் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் சாய் பல்லவி.
தொடர்ந்து தமிழில் மாரி 2, என்.ஜி.கே., பாவக் கதைகள், கார்கி ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார் சாய் பல்லவி.
கூத்தாடின்னா கேவலமா? எம்ஜிஆரும், என்டிஆரும் எப்படி வந்தாங்க? விஜய் விளாசல்
தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார். தீபாவளி விருந்தாக வெளியாகும் அமரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
அதில் தான் எப்படி கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பது எனத் தெரிவித்திருக்கிறார். சாய்பல்லவிக்கு சினிமா துறையில் நுழைய தூண்டுகோலாக இருந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம். இப்படம் அவரை மிகவும் பாதித்திருக்கிறது. இப்படத்தினைப் பார்த்து அறியாத வயதிலேயே சினிமாத் துறைக்கு வந்தால் இதுபோன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருக்கிறார் சாய் பல்லவி.
அதனைத் தொடர்ந்து இதுபோன்ற நல்ல கதையம்சங்களைக் கொண்ட படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறார் சாய் பல்லவி. இவ்வாறு மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் படங்களால் கவரப்பட்டு தான் நடிக்கும் படங்களிலும் இதேபோன்று நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சாய் பல்லவி.
அமரன் படத்திலும் சாய்பல்லவியின் இந்து ரபேக்கா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.