AI பவர் கொண்ட லேப்டாப்பை HP நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இதன் விலை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது.
லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவை சேர்ந்த HP நிறுவனம், புதிதாக ஆம்னி புக் அல்ட்ரா பிளிப் என்ற மாடல் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் 2.8K OLED டிஸ்ப்ளே, 9எம்பி கேமரா மற்றும் 21 மணி நேரம் பேட்டரி தாங்கும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஜெனரேஷன் AI லேப்டாப் வீடியோ எடிட்டிங், கிராபிக் டிசைன் மற்றும் விர்ச்சுவல் டூல்ஸ் அடங்கியது என்பதுடன் மிகுந்த பாதுகாப்பையும் கொண்டுள்ளது. வீடியோ எடிட்டிங் செய்பவர்கள் மற்றும் கிரியேட் செய்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த லேப்டாப்பில் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி ஹேக் செய்ய முடியாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதியும் இருப்பதாகவும் HP நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரே மற்றும் புளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.1,81,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்பை வாங்குபவர்களுக்கு அடோப் போட்டோஷாப் ஒரிஜினல் வெர்ஷன் இலவசமாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், போட்டோஷாப் வசதியை பெற அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இந்த லேப்டாப்பை புக் செய்ய வேண்டும்.
முதல் முறையாக வீடியோ எடிட்டிங் மற்றும் ஃப்ரீலான்சர் கிரியேட்டர்களுக்காக AI அம்சத்துடன் கூடிய லேப்டாப் வெளியாக இருப்பதால், இந்த லேப்டாப் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.