1. பெரியார்: பெரியார் பெயரை கேட்கும் போதே, சிலர் அதை கடவுள் மறுப்பு கொள்கை எனப் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் கடவுள் மறுப்பு குறித்து பேசவில்லை; எல்லா மதங்களுக்கும் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருப்போம். அதே சமயம், பெரியார் கனவு கண்ட பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமத்துவநீதி போன்ற கொள்கைகளை நெறிப்படுத்துவோம்.
2. காமராஜர்: கல்வியும் தொழில்துறையும் மேம்பட உழைத்த பெருமகன். மதச்சார்பின்மையை வேரூன்ற செய்தவர்; நேர்மையான நிர்வாகத்தின் உதாரணமாக திகழ்கின்றவர். அவரை எங்கள் கொள்கை தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்.
3. அண்ணல் அம்பேத்கர்: சமூக நீதி நிலைநாட்டப் பாடுபட்டவர் என்பதால், அவரையும் எங்கள் கொள்கை தலைவராக அறிவிக்கிறோம்.
4. ராணி வேலு நாச்சியார்: கணவரை இழந்த பின்னரும் நாட்டை காத்த மாபெரும் ராணி. இந்தியாவின் முதன்மை சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற பெண் போராளி என்பதால், அவரை நமது கொள்கை விளக்க தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்.
5. அஞ்சலை அம்மாள்: கர்ப்பிணியாக இருந்தபோதும் போராட்டத்தில் பங்கேற்று கைதாகி, குழந்தை பிறந்த பின்பும் திரும்ப சிறைக்குச் சென்ற வீரத் தலைவி.
இந்த ஐந்து தலைவர்களையும் எங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொள்வதில் பெருமை கொள்கிறோம் என்று விஜய் அறிவித்தார்.