நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் தெரியுமா? மாநாட்டு மேடையில் கர்ஜித்த விஜய்…

By John A

Published:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தலைவர் விஜய் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பது குறித்து பேசினார். அதில், “சினிமாவுல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமான்னு மட்டுந்தான் இருக்க நினைச்சேன். ஆனா என்னை வாழ வைச்ச மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா? ஒரு கட்டத்துக்கு மேல காசு சேர்த்து என்ன செய்ய போறோம். இந்த மாதிரி நிறைய கேள்விகள் மனசுக்குள் வந்துக்கிட்டே இருந்துச்சு..! இந்த கேள்விக்கெல்லாம் விடை கண்டுபிடிக்க யோசிச்சப்பதான் அரசியல்ன்னு ஒரு விடை கிடைச்சுச்சு..

அரசியல்ல என்னால சரியா செயல்பட முடியுமான்னு நிறைய சந்தேகமும் வந்துச்சு.. ஆனா ஒவ்வொன்னுக்கும் பூதக் கண்ணாடி போட்டு யோசிச்சுப் பார்த்தா எதையும் உருப்படியா செய்ய முடியாது.. சில விஷயங்களில் பின்விளைவுகள் பற்றி யோசிக்காம இறங்குனா தான் நம்மள நம்புறவங்களுக்கு நல்லது செய்ய முடியும்ங்கிற விஷயம் மனசுல தோனுச்சு..அதான் இறங்கியாச்சு.. இனி எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. இனி எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் நிதானத்தோட செயல்படனும்னு முடிவு செஞ்சிட்டு வந்திருக்கோம்.

மதுரையில் தலைமை செயலக கிளை.. ஆளுனர் பதவி அகற்றம்.. தமிழ் ஆட்சி மொழி.. தவெக செயல்திட்டம்..!

நாம யாரு.. நம்ம எவ்வளவு ஸ்டாரங்குன்னு செயல்லதான் காட்டணும். அதை நிரூபிக்க அரசியல்ல என்ன கொள்கை எடுக்கப் போறோம்ங்கிறது முக்கியம். அப்பதான் நம் எதிரிகள் யாருன்னு தெரியும். அப்படி நாம செயல்பட்டோம்னா நாம எதிரிகளை கண்டுபிடிக்கத் தேவையில்ல.. அவங்களே நம்ம கண்முன்னாடி வந்து நிப்பாங்க..

எதிரிகள் இல்லாம வெற்றி இருக்கலாம். ஆனால் களம் இருக்க முடியாது. களத்துல வெற்றியைத் தீர்மானிக்கிறது நம்ம எதிரிகள் தானே..பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னப்பவே நம்ம எதிரி யாருன்னு முடிவு பண்ணிட்டோம்..இந்தக் கொள்கையைக் கையில் எடுத்தப்பவே இங்க கொஞ்சம் கதறல் ஆரம்பிச்சது..இந்தக் கதறல் இன்னும் சத்தமா கேட்கும்.. ” இவ்வாறு விஜய் தனது அரசியல் பிரவேசம் பற்றி மாநாட்டில் பேசினார்.