தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு உறுதி மொழி… இதெல்லாம் கவனிச்சீங்களா?

By John A

Published:

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு சரியாக 4.05 மணிக்கு விஜய் வருகை தந்தார். தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து ரேம்ப் வாக் செய்த விஜய் கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்தார்.

தோளில் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியுடன் நடந்து வந்ததைப் பார்த்து தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் விஜய் மேடையிலிருந்து 101 அடி உயர கொடிக் கம்பத்தினை ஏற்றி வைத்தார். அதன்பின் கட்சியின் மாநிலப் பொருளாளர் உறுதி மொழி வாசிக்க அதனை விஜய் உள்பட மாநாட்டில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று நெஞ்சில் கைவைத்து ஏற்றுக் கொண்டனர்.

தோளில் தவெக தொண்டு.. ராஜ நடை போட்டு மாநாட்டிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்

உறுதிமொழி :
நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணிலிருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தினை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்னை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.
தொடர்ந்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.

இதன்பின் கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. வெற்றி.. வெற்றி.. வெற்றி.. வாகை வெற்றி என உணர்ச்சிப் பெருக்குடன் ஒலிக்க அனைவரும் அதனை ஆழ்ந்து கேட்டனர். அதில் விஜய்யின் குரலும் பின்னனியில் ஒலித்தது. அதில் பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராசர், அம்பேத்கர் ஆகியோர் அரசியல் வழிகாட்டிகள் என்று விஜய் கூறியிருக்கிறார்.