தோளில் தவெக துண்டு.. ராஜ நடை போட்டு மாநாட்டிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்

By John A

Published:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. விக்கிரவாண்டியில் தற்போது நடைபெற்று வரும் தவெக மாநில மாநாட்டிற்கு தலைவர் விஜய் மாஸ் என்ட்ரி கொடுக்க லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வெள்ளை சட்டையுடன் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவில் எப்படி சிம்பிளாக கலந்து கொண்டாரோ அதேபோல் முதல் மாநில மாநாட்டிலும் விஜய் மிக சிம்பிளாக வந்து அரங்கை அதிர வைத்தார்.

சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..

தொடர்ந்து அவர் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தவாறே ரேம்ப்பில் நடந்து செல்ல தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். கூட்டத்தில் தொண்டர் ஒருவர் கட்சித் துண்டை வீச அதை விஜய் அன்போடு ஏற்றுக் கொண்டு தோளில் போட்டு உற்சாகமாக நடந்தார். பின்னணியில் கட்சிப் பாடல் ஒலிக்க, தளபதி தளபதி என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அவர் நடக்கும் போது சிலர் மின்கம்பங்களில் ஏற முற்பட்ட போது அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

கீழே விழுந்த கொடித் துண்டுகளை மரியாதையுடன் கையில் எடுத்து அதனை ஒவ்வொன்றாக வைத்தார் விஜய். தனது மகனுக்காக இத்தனை லட்சம் தொண்டர்களா என தாய் ஷோபா கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் விஜய்யை பார்த்துக் கொண்டே இருந்தார். கட்சிப் பாடல் முடியும் வரை நிதானமாக நின்று கேட்டார் விஜய். பின்னர் சுதந்திரப் போராட்ட வீர்களுக்கும், தியாகிகளுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் விஜய்.  அதன்பின் கட்சியைக் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டினைத் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாநாடு நடைபெற்று வருகிறது.