கில்க்ரிஸ்ட், குக், லதாம்.. இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய 3 கேப்டன்களுக்கும் இருந்த வியப்பான ஒற்றுமை..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணி யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 12 ஆண்டுகள் தக்க வைத்து வந்த சாதனையை நியூசிலாந்துக்கு எதிராக கோட்டை விட்டுள்ளது. சமீப காலமாக சிறிய அணிகள் கூட கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி விட்டது. சொந்த மண்ணில் ஆடும் அணிகள் கூட எதிரணியை எதிர்த்து மிக கவனமாக ஆடும் சூழல் தான் உருவாகி உள்ளது.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்திலும் இந்திய அணி தங்களின் சொந்த மண்ணில் கடந்த 12 ஆண்டுகளாக எந் டெஸ்ட் தொடரையும் இழக்காமல் இருந்து வந்தது. வெளிநாட்டு மண்ணில் கூட இந்திய அணி அதிக அச்சுறுத்தலுடன் விளங்குவதால் சொந்த மண்ணில் சாதிப்பது என்பதே இந்திய அணிக்கு எளிதாக தான் அமைந்திருந்தது.

ஆனால், தனிக்காட்டு ராஜாவாக சொந்த மண்ணில் சாதித்து வந்த இந்தியாவின் மகத்தான பெருமையாக தூள் தூளாக உடைத்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தலைசிறந்த வீரர்கள் பலரை கொண்ட அணிகள் கூட இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல திணறி வந்தது. ஆனால், டாம் லதாம் தலைமையில் அதிக அனுபவம் இல்லாத நியூசிலாந்து வீரர்கள் இந்திய மண்ணில் சரித்திரத்தை எழுதி விட்டனர்.

இனி ஒரு அணி தங்களின் சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களை 12 ஆண்டுகளாக தோல்வியே இல்லாமல் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது என்பது நிச்சயம் கடினமான விஷயம் தான். அதை இன்னும் பல ஆண்டுகள் தொடரும் வாய்ப்பை இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தவறவும் விட்டுள்ளது.

முதல் டெஸ்டில் 46 ரன்களில் இந்தியா ல் அவுட் ஆனதுமே அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிந்து விட்டது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணியின் பேட்டிங் சுத்தமாக டுபடவில்லை. ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை கடப்பதே கடினமாக இருக்க, ரோஹித் மற்றும் கோலி ஆகியோரின் பேட்டிங் மீதும் மோசமான விமர்சனங்கள் உருவாகி உள்ளது.

இதற்கிடையே, கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர்களை வென்ற எதிரணியின் கேப்டன்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. அப்போது அந்த அணியின் கேப்டனாக ஆடம் கில்க்றிஸ்ட் இருந்தார்.

இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய இங்கிலாந்து அணியின் கேப்டனாக அலைஸ்டர் குக் இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லதாம் உள்ளார். இப்படி இந்திய அணியை கடந்த 20 ஆண்டுகளில் 3 முறை வீழ்த்திய அணிகளின் கேப்டன்களும் இடதுகை பேட்ஸ்மேன்ள் என்ற விஷயம் தான் வியப்பான ஒற்றுமையாக பார்க்கப்பட்டு வருகிறது.