ஆன்மீகத்தையும், சோதிடத்தையும் நம்புபவர்களுக்கு பஞ்சாங்கம் என்பது அத்துப்படி. தினசரி நல்ல நேரம், நாள், கிழமை, திதி, நட்சத்திரம், ராசிபலன் என ஒவ்வொன்றுக்கும் பின்னால் தமிழர்கள் அந்தக் காலத்திலயே வானியல் சாஸ்திரத்தை எழுதி வைத்திருக்கின்றனர். அதில் குறிப்பிட்ட ஒன்று தான் சூலம். இன்று வடக்கே சூலம் அதனால் அந்தத் திசையில் போகாதே.. தெற்கே சூலம் என்று வீட்டில் பெரியவர்கள் கூறுவார்கள்.
அதென்ன சூலம்.. இதனைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமா என்பதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை. சூலம் என்பதும் வாரசூலை என்தும் ஒன்றுதான். பயணத்தின் போதும், புதிய வீடு குடிபுகும் போகும் அவசியம் சூலம் பார்க்க வேண்டும் என சோதிட விதிகள் கூறுகிறது. சூலம் என்றால் ஒரு குறிப்பிட்ட திசையில் சூடு அதிகமாக இருக்கும். அதாவது சூரியனின் கதிர்கள் இத்திசையில் குவிவதால் அதற்குச் சூலம் என்று பெயர் வந்தது. இதனால் தான் அத்திசையில் பயணிக்க வேண்டாம் என்று சோதிடம் கூறுகிறது.
வாரத்தின் ஏழு நாட்களும் மேலும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி எனப் பெயரிட்டு அழைக்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு கோளிற்கும் உரிய திசைக்கு எதிர் திசையை அந்த நாளுக்குரிய சூலம் திசை என்று பொருள்.
உதாரணமாக சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளி ஆகிய கிழமைகளில் மேற்கே சூலம் எனவும், சந்திரன், சனி ஆகிய கோள்களின் திசை மேற்கு என்பதால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் எனவும் அமையும். எனவே தான் சூலம் திசையில் கண்டிப்பா பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பின் பரிகாரமாக பால் அல்லது தயிர் அருந்தி விட்டு பயணத்தினை மேற்கொள்ளலாம்.
சிறிய வீடா இருந்தாலும் வாஸ்து இப்படி இருந்தா போதும்.. ஒஹோன்னு மகிழ்ச்சியும், செல்வமும் தங்கும்
தொழில் விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியது இருப்பின் சூலம் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நல்ல காரியம் மற்றும் கர்ப்பிணிகள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக சூலம் பார்க்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு அதிக சூடு உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்பதால் அந்தத் திசையில் பயணிக்கக் கூடாது என்பது ஐதீகம்.
மேலும் புதுமனைப் புகுவிழா என்றால் புதிய வீட்டின் தலைவாசல் எந்தத் திசையில் உள்ளதோ அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். கிழக்குப் பார்த்த வாசல் என்றால் ஞாயிறு, வெள்ளிக் கிழமைகளில் புதுமனைப் புகுவிழா நடத்தக் கூடாது.