இரட்டை இயக்குநர்கள் ஜே.டி ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் தான் விசில். இப்படத்தில் விவேக் நடித்த காமெடிக் காட்சிகள் அப்போது புகழ் பெற்றது. அதில் அவர் பெண்கள் மனதில் நினைப்பவை எல்லாம் அவருக்குக் கேட்கும். அதன்பின் கரெண்ட் ஷாக் சிகிச்சைக்குப் பிறகு விலங்குகள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என்று அதன் மனநிலையை அறியும் சக்தி கிடைக்கப்பெறும். இந்தக் காமெடி சினிமா ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.
ஆனால் அன்று வெறும் காமெடிக்காக எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் இன்று நிஜமாகவே விலங்குகளின் மனநிலையை அறியும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா. மனிதனால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒன்று மரணத்தை வெல்வது தான். அதுபோக அத்தனையும் விஞ்ஞான வளர்ச்சியால் சாத்தியமாகி விட்டது.
இன்னும் 60 நாட்களில் உலக அளவில் ஏற்படப் போகும் பயங்கர மாற்றம்.. நாஸ்டார்டாம்ஸ்-ன் அதிர்ச்சி கணிப்பு
இந்நிலையில் விலங்குகள் மனதில் என்ன நினைக்கிறது என்பதையும் அதன்படி அவைகளின் செயல்திறனை பராமரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் வந்த பிறகு அவை அறிவியலையே புரட்டிப் போடு விட்டன. இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளின் மனநிலையை அறியும்படி புரோகிராம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் பன்றிகளின் உறுமல் சத்தத்தை வைத்தே அவைகளின் மனநிலையை அறியும் தொழில்நுட்பத்தினை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பன்றிகளின் உறுமல் ஓசையை வைத்தே அவை பசியில் உள்ளதா அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். இவை நடைமுறைக்கு வரும் போது அடுத்தடுத்து ஒவ்வொரு உயிரினத்திற்கும் இதுபோன்று ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் அவற்றின் செயல்பாட்டினைக் கண்காணிக்க முடியும் எனத் தெரிகிறது.