பசு மாட்டிற்கு இப்படி ஒரு விழாவா? நெகிழச் செய்த திருப்பத்தூரை சேர்ந்த நபர்…

By Meena

Published:

செல்லப் பிராணிகள் வளர்ப்பது பல பேருக்கு இன்று பிடித்தமான ஒரு விஷயம். ஏனென்றால் செல்லப்பிராணிகள் தான் நம் மனதை காயப்படுத்தாது. நம் மீது அன்பாக பழகும். நாம் அன்பை காட்டுவது போல் அது பல மடங்கு அன்பை காட்டும். அது எந்த உயிரினமாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஒரு சிலர் நாய் வளர்ப்பாகள் ஒரு சிலர் பூனை எலி மாடு எலி வாத்து என பலவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பார்கள்.

இந்தியாவில் செல்லப்பிராணிகளை தான் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதுவார்கள். அதை குடும்பத்தில் ஒரு நபராக மதித்து அதற்கு பிறந்தநாள் கொண்டாடுவது பார்ட்டி வைப்பது கேக் வெட்டுவது போன்ற பல செயல்களை செய்வார்கள். அதனுடன் குடும்ப போட்டோவையும் எடுத்து சமூக வலைத்தள பக்கத்திலும் எல்லாவற்றையும் பகிர்வதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் தமிழ்நாட்டிலும் குறிப்பாக பசு மாடுகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பவர்கள் அதை வெகுவாக மதிப்பார்கள். ஏனென்றால் இந்து மதத்தில் பசுமாடு தெய்வத்தின் அம்சமாக கருதப்படுகிறது. அதனால் ஒவ்வொரு வீட்டிலும் பசுமாடுகளை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். ஆனால் திருப்பத்தூரில் சேர்ந்த ஒரு நபர் அதற்கும் ஒரு படி மேலே போய் தனது பசு மாட்டிற்கு விழாவினை நடத்தி இருக்கிறார். அது என்னவென்று இனி காண்போம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகே வடுகபட்டி என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் ஞானவேல். இவர் ஒரு பசுமாட்டை வளர்த்து வந்திருக்கிறார். அந்த பசு மாடு ஒன்பது மாதம் சினையாக இருந்திருக்கிறது. அதனால் தான் செல்லமாக வளர்க்கும் பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்த ஞானவேல் ஊர் மக்களை கூப்பிட்டு வளைகாப்பு நடத்தி இருக்கிறார். 21 தட்டுகளில் சீர்வரிசையும் ஐந்து வகை உணவும் வைத்து அந்த மாட்டுக்கு விழா நடத்தி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் அந்த ஊர் மக்களுக்கு அறுசுவை விருந்தும் அளித்திருக்கிறார். இதை அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.