பிரம்மாண்டமாக தயராகும் தவெக மாநாட்டு மேடை.. ஆளுயர கட்அவுட்.. பாராகிளைடிங் என எல்லாமே ஹைடெக் தான்..

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநடு வருகிற 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெறுகிறது. மாநாட்டிற்கு காவல் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி…

TVK Conference

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநடு வருகிற 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெறுகிறது. மாநாட்டிற்கு காவல் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி கிடைத்தபின் தடபுடலாக மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மாநாடு முடிந்தவுடன் நிலம் எப்படிப் பெறப்பட்டதோ அதேபோன்று திரும்ப வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் முதல் அரசியல் மேடை என்பதால் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அரசியல் அரங்கிலும் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளுக்கு பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. பார்க்கிங் முதல் சட்ட ஆலோசனை வரை தனித்தனியாக குழுக்கள் பிரிக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் வேகமெடுத்துள்ளது.

மாநாட்டில் பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்த டிஜிட்டல் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு அதற்கேற்ற வகையில் பார்க்கிங் திட்டம் வழிவகுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக விக்கிரவாண்டியைச் சுற்றியுள்ள அனைத்து விடுதிகளும் ஹவுஸ்புல்லாகி விட்டது.

எங்கடா போன…?! நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்.. சோகத்தில் தவெக

மேலும் இம்மாநாட்டில் பல்வேறு தலைவர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட உள்ளன. தவெக தலைவர் விஜய் கட்அவுட்டுடன் காமராசர், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோரின் கட்அவுட்களும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் அடங்கிய கட்அவுட் தமிழ் சான்றோர்கள், தமிழன்னை உள்ளிட்ட கட்அவுட்களும் இடம்பெற உள்ளது.

ஏற்கனவே தவெக தலைவர் விஜய் குழந்தைகள், முதியோர்கள், உடல்நலம் குன்றியோர் ஆகியோரை மாநாட்டிற்கு வர வேண்டாம் என்றும், தொலைக்காட்சியில் காணுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார். இதுமட்டுமன்றி மாநாட்டுப் பந்தலின் முன்பு ரேம்ப் வாக் செல்லும் வகையில் நீண்ட நடைமேடை உருவாக்கப்ட்டிருக்கிறது. மேலும் மாநாட்டினை விளம்பரப்படுத்தும் நோக்கில் ராட்சத பலூன்கள், விமானத்தில் தவெக கொடி கட்டப்பட்டு பாராகிளைடிங் பயணம் என அனைத்தும் ஹைடெக் முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மாலை 4 மணிக்கு மாநாடு ஆரம்பிக்கும் எனவும் 6 மணியளவில் விஜய் பேசவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாநாட்டில் அவர் 2 மணிநேரம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் அடுத்த மிகப்பெரும் அரசியல் இயக்கத்திற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட உள்ள தவெக மாநாட்டிற்கு பல்வேறு பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர் எனத் தெரிகிறது.