மனிதர்கள் இந்த பூமிக்கு நல்லவைகளை அதிகமாக செய்கிறார்களா அல்லது கெட்டவைகளை அதிகமாக செய்கிறார்களா என்று பார்க்கப் போனால் கெட்டவைகள் தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் குப்பைகளை கொட்டுவது அதற்கும் மேலாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது. இதுதான் பூமிக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய ஒன்று. என்னதான் அரசாங்கம் கட்டுப்பாடு விதித்தாலும் தனி மனித பொறுப்பு இருந்தால் மட்டுமே எந்த ஒரு சமூகத்தையும் மாற்ற முடியும்.
இந்த பூமி பாதிப்பு அடையும்போது அது பலவித பேரிடர்களை உருவாக்கும். இயற்கை மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பூகம்பம் சுனாமி வெள்ளப்பெருக்கு கட்டுக்கடங்காத மழை போன்றவற்றை ஏற்படுத்தி எச்சரிக்கிறது. ஆனாலும் மனிதர்கள் செய்வதை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் அதிக அளவுகள் பேரிடர் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த பேரிடர்களை எல்லாம் பார்க்கும் பொழுது நமக்கு மனசு பதற்றம் அடைகிறது. சிறிய விஷயம் ஏதாவது நடந்தால் கூட இயற்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறதோ வரப்போகும் ஆபத்திற்கு ஏதாவது அறிகுறியாக இருக்குமோ என்று தோன்றும். அந்த அளவுக்கு தான் இன்றைய நிலைமை இருக்கிறது. அப்படி பதற்றம் அடைய வைக்கும் சம்பவமாக கேரளாவில் ஒன்று நடந்திருக்கிறது.
அது என்னவென்றால் கேரளா கோழிக்கோடு கடற்கரை ஓரமாக லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கரை ஒதுங்கி இருக்கிறது. இதை மத்தி சாகரா என்றும் கேரள மக்கள் கூறுகின்றனர். இந்த லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கரையில் மொத்தமாக ஒதுங்குவதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதிகப்படியான மீன்கள் இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வந்து இதை அள்ளி செல்கின்றனர்.