தங்க நகைக்கடன்களில் பெரும் மோசடி.. ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி நடவடிக்கை..!

By Bala Siva

Published:

 

ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது நகை கடன் ஒன்றுதான். பணக்காரர்களுக்கு மிக எளிதில் பர்சனல் லோன் உள்பட பல கடன்கள் கிடைத்துவிடும், ஆனால் ஏழை எளியவர்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால் நகைகளை நம்பி உள்ளனர். அவசர செலவுக்கு நகைகளை வைத்து அதன் பின் அதை மீட்டு மறுபடியும் அடகு வைப்பது என்பது நடுத்தர வர்க்கத்தின் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் தான் நகை கடன்களில் மிகப்பெரிய மோசடி செய்திருப்பதை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நகை கடன் பெற்றவர்கள் பணத்தை திரும்ப கட்டாத போது, அடமானம் வைக்கப்பட்ட நகைகள் ஏலம் விடப்படுவது வழக்கம் தான். ஆனால் இந்த ஏலத்தில் கடன் தொகை போக, மீதி தொகையை நகைக்கு சொந்தமானவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் பணத்தை திருப்பி கொடுப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.

அது மட்டும் இன்றி, ஏலம் நடந்த விஷயமே சம்பந்தப்பட்ட கடன்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டவில்லை என்றும் ரிசர்வ் வங்கி கவனத்திற்கு வந்ததால், நிதி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் பல நகை கடன் தரும் நிறுவனங்கள் நகைகளை பாதுகாக்க சரியான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், போலியான அக்கவுண்டுகளை உருவாக்குதல், வாரா கடன்கள் பற்றிய தகவல்களை மறைப்பது உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்து உள்ளது.

இதனை அடுத்து, ரிசர்வ் வங்கி கடுமையான கண்காணிப்பை செய்து வருவதாகவும், தவறு செய்யும் நிதி நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நகை கடன் கொடுக்கும் சில நிதி நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்திருப்பதிலிருந்து இதை கண்டு கொள்ளலாம்.

அனைத்து நிதி நிறுவனங்களும் நான் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதில்லை என்றாலும், பல நிறுவனங்கள் மோசடி செய்வதாகவும், தங்கள் தவறை திருத்திக் கொண்டு தங்க நகை கடைகளில் உள்ள மோசடிகளை கைவிட்டால் மட்டுமே பொன் முட்டையிடும் வாத்து போன்ற நகைக்கடன் என்பது நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்புக்கும் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.