உலக நாயகன் கமல்ஹாசனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கின்றனர். இப்படி இவர்கள் காம்போவில் உருவான ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் தான் விருமாண்டி. பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து விருமாண்டி திரைப்படம் 2004-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியானது. இந்தப் படத்தில் இளையராஜா முதலில் இசையமைக்க மறுத்தாராம்.
விருமாண்டி படத்தின் கதையை தனது அசிஸ்டெண்ட்டுகள் மூலம் இளையராஜாவிடம் சொல்ல வைத்திருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் அவரது அசிஸ்டெண்டுகள் இளையராஜாவிடம் முழுக் கதையையைம் காட்சிகளாகக் கூறாமல் வெறும் சண்டைக் காட்சிகள் குறித்த கதையை மட்டும் விளக்கியுள்ளனர். இதனால் இளையராஜா இந்தப் படத்தில் தனக்கு வேலையே கிடையாது என்றும், இசையமைக்க மாட்டேன் என்றும் மறுத்திருக்கிறார்.
1000 நாட்களைத் தாண்டி ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிக்கும் சிம்பு படம்.. இப்படி ஒரு சாதனையா?
உடனடியாக கமல்ஹாசனின் காதுகளுக்கு இவ்விஷயம் போக, இளையராஜாவிடம் ஏன் எனக் கேட்டிருக்கிறார். வெறும் சண்டைக் காட்சிகள் மட்டுமே உள்ளது இதற்கு யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம் நான் இசையமைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். உடனடியாக கமல் தனது அசிஸ்டெண்டுகளைக் கூப்பிட்டு படத்தில் வரும் மற்ற காதல், சோகக் காட்சிகளைக் கூறினீர்களா என்று கேட்டவுடன் அவர்கள் இல்லை எனக் கூற பின் திரும்பவும் இளையராஜாவிடம் காட்சி வாரியாகக் கதையைக் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
அதன்பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் இளையராஜா. மேலும் உன்னை விட என்ற பாடலில் வரும் உன்னை விட இங்க உறவுன்னு சொல்லிக்கிற யாரும் இல்ல.. எவரும் இல்ல.. என்று இளையராஜாவைப் பார்த்துக் கமல் பாட… பதிலுக்கு இளையராஜா என்னை விட உன்ன சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்லல.. எவரும் இல்ல.. என்று பாடியிருக்கிறார். இப்படித்தான் இந்தப் பாடலும் உருவானது. இப்பாடலை கமல்ஹாசனுடன், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருப்பார். விருமாண்டி தமிழ்சினிமாவின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக விளங்கியது.