சீனாவில் இருந்து தரம் குறைந்த லேப்டாப், கம்ப்யூட்டர்கள் மற்றும் டேப்லெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும், இவை பயனர்கள் அதிருப்தியை சம்பாதித்து வருவதாகவும், எனவே இதுபோன்ற பொருட்கள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதைய இறக்குமதி ஒப்பந்தம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முடிந்து விடும் என்றும், ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு முதல் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் பயனர்களுக்கு தரமான பொருள் கிடைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் தயாரிப்புகள் அதிகமாக விற்பனையாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தயாராகும் லேப்டாப்புகள் மற்றும் கம்ப்யூட்டர்கள் ஆகியவை விற்பனை அதிகரிக்க இந்த திட்டம் என்றாலும், குறைந்தபட்சம் பாதுகாப்பு மற்றும் தரமிக்க பொருள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் நமது மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, சீனா உள்பட சில நாடுகளில் இருந்து குறைந்த விலையில் தரமற்ற லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்வது இனி தவிர்க்கப்படும் என்றே கூறப்பட்டு வருகிறது.