மும்பை – புனே எக்ஸ்பிரஸ் பாதையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது என்றும், வேகமாக வாகனங்களை இயக்குதல், அலட்சியமான டிரைவிங் ஆகியவை காரணமாக உருவாகும் விபத்துகளை தடுப்பதற்காக 436 நவீன சிசிடிவி கேமராக்களை நிறுவும் பணி தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கேமராக்கள் முழுமையாக டிராபிக்கை கண்காணித்து, அலட்சியமாக ஓட்டும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதிக்கப்பட்ட வேகத்துக்கு விட அதிகமாக ஓட்டும் ஓட்டுநர்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட அமைப்பாக வேக எல்லை அடையாளங்கள், அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மும்பை -புனே எக்ஸ்பிரஸ் பாதை என்பது நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் ஒரு பாதையாக இருக்கும் நிலையில், இங்கு விபத்துகளால் சில ஆண்டுகளாக மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாகவும், இந்த சிக்கலை தீர்ப்பதற்காக அதிகாரிகள் சரியான டேட்டாக்களை பயன்படுத்தி, சாலை பாதுகாப்பை மேம்படுத்த ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
436 கேமராக்கள் அமைக்கப்பட்ட பின்னர் சோதனை ஓட்டங்கள் நடைபெறும் என்றும், அதன்பின் போக்குவரத்து விதிகளை மேலும் ஓட்டுனர்களை தண்டிக்கும் செயல்களை எளிதாக்கி எக்ஸ்பிரஸ் பாதையை அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான பாதையாக மாற்ற இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.