இசைக்குயில் பி. சுசீலாவே 20 டேக் வாங்கி பாடிய பாடல்.. அவ்ளோ கஷ்டம் ஒன்னுமில்ல.. இருந்தாலும் ஏன் தெரியுமா?

By John A

Published:

இசைக்குயில் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாடகர் தான் பி.சுசீலா. காலத்தால் அழியாத பல காவியப் பாடல்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என பல்வேறு மொழிகளில் பாடியவர். இப்படி கைதேர்ந்த தொழில் முறைப் பாடகராகவும், முறையாக சங்கீதம் பயின்றவராகவும் விளங்கிய பி. சுசீலாவிற்கே ஒருபாடல் 20 டேக்குகளைத் தாண்டிப் போயிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

பி.சுசீலாவினை உச்சத்தில் கொண்டு சேர்த்த அந்தப் பாடல் தான் தங்கமலை ரகசியம் படத்தில் இடம்பெற்ற அமுதைப் பொழியும் நிலவே.. நீ அருகில் வராததேனோ பாடல். இந்தப் பாடல் தான் பி.சுசீலாவை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. 1957-ல் இயக்குநர் பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவாஜிகணேசன், ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் லிங்கப்பா என்ற பழம்பெரும் இசையமைப்பாளர்.

தீயாய் பரவிய தமிழ்த்தாய் வாழ்த்து போட்டி.. 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கிடைச்சா விடுவாங்களா?

இந்தப் பாடல் ரெக்கார்டிங்கின் போது காட்சிப்படி பாடலை ஜமுனா பாட வேண்டும். ஜன்னல் வழியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பார்க்க வேண்டும். யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக மாறு வேடத்தில் வந்திருப்பார். அந்த நேரம் அவரை வேலைக்காரப் பெண் பார்த்து தட்டை கீழே போட்டு கத்த வேண்டும். இதுதான் இந்தப் பாடலுக்கான காட்சி.

இப்படி பாடல் ரெக்கார்டிங் செய்யும் போது இசைக்குயில் முதன் முறையிலேயே தனது திறமையைக் காட்டி விட்டார். ஆனால் இடையில் கத்துவது போல் அமைந்த குரலானது சரிவர அமையவில்லை. இதற்காக குரல் கொடுப்பவர் முறையாக கத்தாததால் அந்தப் பாடல் மீண்டும் ரெக்கார்டிங் செய்யப்பட்டது. இப்படியே 20 முறைக்கு மேல் அமுதைப் பொழியும் நிலவே பாடல் மறுபடியும் ரெக்கார்டிங் செய்யப்பட்டது. கடைசியாக சரியாக அந்தக் குரல் பொருந்த அதன்பிறகே ரெக்கார்டிங் முடிந்திருக்கிறது.

இதனை பேட்டி ஒன்றில் பி.சுசீலா தெரிவித்திருக்கிறார்.