டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. எவ்ளோ தெரியுமா?

By John A

Published:

சென்னை : தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று மும்முரமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் தீபாவளி போனஸ் வழங்கி அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. மத்திய அரசும் ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ரயில்வே ஊழியர்களுக்கு கிட்டதட்ட 78 நாள் ஊதியத்தினை போனஸாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் டாஸ்மாக்கில் சூப்பர் வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ் மேன் என மூன்று நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது.

சென்னையிலிருந்து தீபாவளிக்குச் சொந்த ஊர் போறீங்களா? இந்த ரூட்ல மட்டும் போகாதீங்க.. அமைச்சர் அட்வைஸ்..

அதன்படி டாஸ்மமாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 16,800 வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக அரசுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர். பொதுவாகவே தீபாவளி வருடந்தோறும் டாஸ்மாக் மது வகைகளின் விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னை, மதுரை, கோவை என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பல நூறு கோடிகளில் மது விற்பனை ஆகிறது.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மதுப்பிரியர்கள் மொத்தமாக டாஸ்மாக் மதுவினை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த வருடம் டாஸ்மாக் மது விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.