தென்னிந்திய சினிமாவில் அந்தக் காலத்துகனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் கன்னடத்துப் பைங்கிளி என அந்தக் காலத்து ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட சரோஜா தேவி. எம்.ஜி.ஆர்., சிவாஜி, தெலுங்கில் நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து காலத்தால் அழியாத காவியங்களைக் கொடுத்தவர் சரோஜோதேவி. இவர் நடித்த படங்களின் பாடல்களில் பெரும்பாலும் பின்னனிக் குரல் பி.சுசிலாவாகத்தான் இருக்கும். மேலும் சரோஜாதேவியும் அதனையே விரும்பினார்.
இவர் ஹீரோயினாக நடித்த காலகட்டம் முழுவதும் பி.சுசீலாவே பின்னனி பாடியிருப்பார். இந்நிலையில் சரோஜாதேவிக்கு அடுத்த தலைமுறை நடிகைகள் களத்தில் இறங்கினர். இதனால் இவர் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். மேலும் ஒருகட்டத்தில் முற்றிலும் நடிப்பதை நிறுத்திய சரோஜாதேவி பல வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் இவர்களுக்குப் பாடல்கள் கிடையாது.
இப்படியெல்லாம் பண்ணலாமா இர்பான்.. மீண்டும் வெடித்த சர்ச்சை.. அதிர்ச்சி வீடியோ..
இதனையடுத்து மீண்டும் 12 வருடங்கள் கழித்து 2009-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் நயன்தாராவின் பாட்டியாக நடித்திருப்பார் சரோஜாதேவி. இப்படத்தில் சரோஜாதேவிக்கு ஒரு பாடல் வைக்கப்பட்டது. அந்தப் பாடலை பி.சுசீலாதான் பாட வேண்டும் என பிடிவாதம் பிடித்தார் சரோஜா தேவி. ஆனால் படக்குழு அதனை ஏற்கவில்லை.
சரோஜாதேவி நடித்திருந்த பாடலை சந்தியா என்பவர் பாடியிருந்தார். தேக்கோ தேக்கோ என ஆரம்பிக்கும் இந்தப் பாடலை வாலி எழுதியிருந்தார். வேறு பாடகி பாடியிருந்ததால் இந்தப் பாடல் எப்படி வந்திருக்குமோ என சரோஜாதேவி ஒருவித பயத்துடனே நடித்திருக்கிறார். ஆனால் அதன்பின்பு நடந்தது தான் டிவிஸ்ட்டே. இப்பாடலைப் பாடிய சந்தியா என்ற பாடகர் யாருமல்ல. பி.சுசீலாவின் மருமகள் என்பது பின்னர் சரோஜாதேவிக்குத் தெரிய வர மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.