பாம்பு கடிச்சிருச்சா…? இத மட்டும் செய்யாதீங்க.. உடனே உயிர் போகும் ஆபத்து..

தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் வீட்டில் ஊர்வனவற்றின் தாக்கம் அதிகம் இருக்கும். மலைப்பிரதேசங்களில் வாழ்பவர்கள், வீட்டின் அருகில் செடி, கொடிகள் இருப்பவர்கள் என இவர்கள் கண்களில் அடிக்கடி பாம்பு தென்படலாம். அவைகள் குளிரில் இருந்து…

Snake Bite

தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் வீட்டில் ஊர்வனவற்றின் தாக்கம் அதிகம் இருக்கும். மலைப்பிரதேசங்களில் வாழ்பவர்கள், வீட்டின் அருகில் செடி, கொடிகள் இருப்பவர்கள் என இவர்கள் கண்களில் அடிக்கடி பாம்பு தென்படலாம். அவைகள் குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெப்பப் பகுதிக்கு வருகிறது. இதனால் வீட்டினுள் புகும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் எதிர்பாராத வேளைகளில் கடித்து விடுகிறது. இதனால் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது என்பது பற்றித் தெரிந்து கொள்வோம்.

முதலில் பாம்பு கடித்தவுடன் பதட்டமடையக் கூடாது. பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றைவையே. அப்படியே பாம்பு கடித்தால் கடிபட்ட இடம் தாழ்வாகவும், நெஞ்சுப் பகுதி உயரமாகவும் அல்லது ஒருசாய்த்துப் படுக்க வைக்க வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவுவது தடுக்கப்பட்டு நச்சுத் தன்மை ஏற அதிக நேரம் எடுக்கும். கையில் கடித்தால் மோதிரம், கால்களில் காலணி, ஷு போன்றவற்றை அகற்றவும்.

AI மூலம் ஸ்பேம் அழைப்புகளை கண்டுபிடித்த ஏர்டெல்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

கடிபட்டவரை ஒரே நிலையில் படுக்க வைக்க வேண்டும். நடக்கவோ ஓடவோ கூடாது. குடிப்பதற்கு தண்ணீர் உள்பட எதையும் தரக் கூடாது. மேலும் சினிமா படங்களில் காட்டுவது போல் கடிபட்ட இடத்தில் வாய் வைத்து உறிஞ்சவோ, கீறி விடவோ கூடாது. கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது நலம். கடிபட்ட இடத்தினை லேசான காட்டன் துணியால் ஒருவிரல் புகும் அளவிற்கு கட்ட வேண்டும். அழுத்தமாக ரப்பர், கயிறு போன்றவற்றைக் கொண்டு கண்டிப்பாகக் கட்டக் கூடாது. இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு கடிப்பட்ட பகுதி அழுகி அந்தப் பகுதியையே நீக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

பின்னர் உடனே மருத்துவமனைக்குச் சென்று பாம்பு விஷ முறிவு மருந்தினை செலுத்தி சிகிச்சை பெறலாம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இலவசமே. நஞ்சற்ற பாம்பு கடித்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தசை இறுக்க நோயினை ஏற்படுத்திவிடும்.