இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் AI தொழில்நுட்பத்தின் மூலம் இத்தகைய ஸ்பேம் கால்களை கண்டுபிடித்து, தங்களது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தருகிறது. அதிகமான ஸ்பேம் கால்களை கண்டுபிடித்து, வாடிக்கையாளர்கள் அதைத் தெரிவிப்பதால், அந்தக் கால்களை நாம் அட்டெண்ட் செய்யாமலே கட் செய்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், பெரும்பாலும் அந்த அழைப்புகளை தவிர்த்து விட முடியும்.
இந்த நிலையில், தினமும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு எத்தனை ஸ்பேம் கால்கள் வருகிறது என்பதை கண்டறிந்த ஏர்டெல் ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. முன்பின் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் எண்ணிக்கை, 12 நாட்களில் 112 மில்லியன் அழைப்புகள் வந்திருக்கின்றன என்று கூறப்படுகிறது, இது தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு மட்டும் என ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு சிஇஓ தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தற்போது அந்த ஸ்பேம் கால்களை வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் செய்து வருகிறோம். இந்தக் கால்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்ல, மற்ற பல நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் வருகின்றன. இந்தியாவில் மட்டும் ஸ்பேம் கால்களின் எண்ணிக்கை பில்லியன் கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது, இது ஆச்சரியத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதேபோல், குறுஞ்செய்திகளிலும் ஏராளமான ஸ்பேம் குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் குறுஞ்செய்திகளில் உள்ள லிங்கை சரி பார்த்து தான் கிளிக் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.